உரிச்சொல் வேற்றுமைச்சொல் சூ. 59 | 375 |
இ-ள் : உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபு போல அப்பொருள் வேறு படுத்தற்குரியவை உரியவாம், எ-று. அது ‘நனி’ என்பது உறுவும், தவவும் போல மிகுதி குறித்துவரினும் உறுவன, தவவன எனப்பொருளுணர வாராது, இடைச்சொற்போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயின் அல்லது பொருளுணர வாராமை கண்டு கொள்க. பிறவும் அன்ன. நச் இஃது உரிச்சொற்கும் விசேடித்தல் உண்டு என்கின்றது. இ-ள் : உரிச்சொல் மருங்கினும்-உரிச்சொல்லிடத்தும், உரியவை உரிய-விசேடிக்குஞ் சொல்லாதற்கு உரியன உரியவாம், எ-று. எல்லாம் உரியன ஆகா எனவே, உரிச்சொற்கள் விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் நிற்பனவுள என்பது பெற்றாம். உ-ம் : உறுகால், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என்பன ஒன்றை விசேடித்தல்லது வாரா. குருமணி, விளங்குகுரு | கேழ்கிளர் அகலம், செங்கேழ் | செல்லல் நோய், அருஞ் செல்லல் | இன்னற் குறிப்பு, பேரின்னல் |
இவை தாம் ஒன்றனை விசேடித்தும், பிற தம்மை விசேடிக்கப்பட்டும் நின்றன. குரு விளங்கிற்று, செல்லல் தீர்க எனத்தாமே நின்று வினை கொள்வன விசேடிக்கப்படும் தன்மையுடையன என்று உணர்க. பிறவும் இவ்வாறு வருவன உளவேல் கண்டு கொள்க. மருங்கினும் என்ற உம்மையை எச்ச உம்மையாக்கி இடைச்சொற்களினும் விசேடித்து நிற்றற்கு உரியன சிலவுள; எல்லாம் உரியன ஆகா எனப்பொருள் உரைத்து. |