பக்கம் எண் :

376தொல்காப்பியம்-உரைவளம்

‘கொன்னூர் துஞ்சினும்’       (குறுந். 188)
‘கொன் முனை யிரவூர் போல’       (குறுந். 91)
‘கொன்னே கழிந்தன் றிளமை’       (நாலடி. 55)

என்றாற்போல வருவன பிறவும் கொள்க.

முன்னிற்குஞ் சூத்திரத்தால் கூறிய விசேடித்தல் உரிச்சொற்கும் இடைச் சொற்கும் ஏற்றலின் அவற்றையும் ஈண்டுக் கூறினார் விசேடித்தல் இடைச்சொற்குச் சிறுபான்மை யாகலின் அதை உம்மையால் தழீஇயினார்.

வெள்

இஃது உரிச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருளுணர்ச்சி கூறுகின்றது.

இ-ள் : உரிச்சொற்கண்ணும் வேறுபடுத்துஞ் சொல்லாதற்கு உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா, எ-று.

எனவே, உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறு படுக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய் வருவனவே பெரும்பான்மை என்பர் சேனாவரையர்.

உ-ம் : உறுபொருள், தவப்பல, நனிசேய்த்து, ஏ கல்லடுக்கம் என முறையே, உறு, தவ, நனி, ஏ எனவரும் உரிச்சொற்கள் வேறுபடுக்குஞ் சொல்லேயாய் வந்தன. குருமணி விளங்குகுரு, கேழ்கிளரகலம் செங்கேழ், செல்லல் நோய் அருஞ்சொல்லல், இன்னற்குறிப்பு பேரின்னல் என்புழி முறையே குரு, கெழு, செல்லல், இன்னல் என்பன ஒன்றனை விசேடித்தும் ஒன்றனால் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய் வந்தன.

ஆதி

உரிச்சொற்களிலும் வேறுபட்ட பொருள்தரற்கு உரியவை சில.

இளங்கன்று-நாகிளங்கன்று-நாகு என்னும் உரிச்சொல் மிக இளமை எனக்குறித்து நிற்கின்றது.