பக்கம் எண் :

உரிச்சொல் வேற்றுமைச்சொல் சூ. 59377

பலபேசினான்-தவப்பலபேசினான்-மிக அதிகமாகப் பேசினான் என்று குறித்தது.

பெருஞ்செல்வம்-விழுப்பெருஞ் செல்வம்-மிக அதிகமான செல்வம் எனக்குறிக்கின்றது.

மாப்புகழ் - பெரும்புகழ் - உறுமாபுகழ் - மிகப்பெரும்புகழ் இவ்வாறு உரிச்சொற்கள் பொருளை வேறுபடுத்துவது காண்க.

வினையெச்சம் வேறுபடுதல்

450. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய       (60)

ஆ. மொ. இல.

The adverbial participle also has
different grammatical features.

பி. இ. நூ.

நன் 346

சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், முன்னர் வினையியலுள் வினையெச்சம் என்று ஓதப்பட்டன வற்றுக்கண் ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : வினையெச்சம் என்று கூறப்பட்டன செய்யுட்கண் தாம் வந்து முடிபு கொண்டதன் தன்மையாலே நில்லா; நின்றாற் பொருளிசையா வாதலால் ஓர் எச்சந் திரிந்து ஓர் எச்சமாகியும் நிற்கும் இலக்கணத்தினை யுடைய, எ-று.

வ-று : ஞாயிறுபட்டு வந்தான்; ஞாயிறு படவந்தான் என்பதுமன் ஆகற்பாலது. படவென்பது செயவென் எச்சம்; அது திரிந்து பட்டு என்னும் செய்து என் எச்சமாகி நின்றதென்பது. ‘கோழி கூவிப்புலர்ந்தது என்பதூஉம் செயவென் எச்சம் செய்தென் எச்சமாகித் திரிந்து நின்றது என்பது.