பக்கம் எண் :

378தொல்காப்பியம்-உரைவளம்

அங்ஙனம் நின்றவேனும் அவற்றைச் செயவென் எச்சமாக வுணர்ந்து கொளல் வேண்டும். அல்லாக்கால் சொல் முடிபு எய்தாது. என்னை? 1’ஞாயிறுபட்டு’ என்றக்கால் ‘வந்தான்’ என்றலும் முடியற்பாலது, பின்னும் ஞாயிற்றின்மேல் வினைகொண்டு முடியற்பாற்று. ‘முதனிலை மூன்றும் முதனிலை முடிபின’ (வினை. 31) என்று உரைத்தாராகலின் என்பது, ‘கோவிகூவப் புலர்ந்தது’ என்பதற்கும் அஃது ஒக்கும்.

இனி, ‘மோயினளுயிர்த்த காலை’ (அகம் 5) என்புழி ‘மோந்து’ என்னும் வினையெச்சம் ‘மோயினள்’ என முற்றுச் சொல்வாய்பாட்டாற் திரிந்து நின்றதேனும் வினையெச்சமேயாகல் வேண்டும.் பிறவுமன்ன.

பிறஎன்றதனால்,

ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி விளங்குன்றிக் கால்      (குறள். 14)

என்பது ‘குன்றியக்கால்’ என்னும் வினையெச்சம் ‘குன்றிக்கால்’ என நின்றது.

சேனா

இ-ள் : மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல இலக்கணத்தை யுடைய, எ-று.

அவைகளாவன : ‘உரற்கால்யானை’ 1ஒடித்துண் டெஞ்


1. ஞாயிறுபட்டு வந்தான் என்றக்கால்..............முடியற்பாற்று. இத்தொடர் சரியில்லை. “வந்தான் என்றது ஒருவன் வினை; பட்டு என்றது ஞாயிற்றின் வினை, பட்டு என்றது செய்து என்வாய் பாட்டு எச்சம். அது தன் கருத்தாவின் வினையே கொண்டு முடிய வேண்டும். இங்கு வந்தான் என்ற பிறகருத்தா வினை கொண்டது. அதனால் முறையாக முடியவில்லை. அதனால் பட்டு என்பதைப் படஎன, கொள்ளல் வேண்டும் என்ற கருத்தில் அத்தொடர் அமைந்தது.

1. உண்டு என்பது யானையின் தொழில் உணர்த்தும் வினையெச்சம் எஞ்சிய என்பது யானை ஒடிந்து உண்ண எஞ்சிய மரத்தின் தொழில்