பக்கம் எண் :

வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60379

சியயா’ (குறுந் 232) எனவும், 2‘ஞாயிறுபட்டு வந்தான்’ எனவும் செய்தென் எச்சம் வினைமுதல் கொள்ளாது பிறிதின் வினைகோடலும், அஃது ஈறு திரிதலும்;

3‘மோயினள் உயிர்த்த காலை’ (அகம். 5) எனவும், ‘கண்ணியன் வில்லன் வரும் (குறிஞ்சிக்கலி 1) எனவும் முற்றுச்சொல்லது திரிபாய் வருதலும்;

4“ஓடி வந்தான் விரைந்து போயினான்’ எனவும், 5‘வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய்’ எனவும் 6‘செல்வன் தெரிகிற்பான், புதுவதனியன்ற அணியன்’ (அகம் 66) எனவும் தம்மை முடிக்கும்.


2. படுதல் ஞாயிற்றின் வினை, வருதல் ஒருவன் வினை.

3. மோயினள் என்னும் முற்று. மோந்து என்ற வினையெச்சப் பொருளில் திரிந்து வந்தது. கண்ணியன் வில்லன் என்னும் முற்றுகள் கண்ணியனாய் வில்லனாய் என எச்சப் பொருளில் திரிந்து வந்தன.

4. வந்தான் என்பது முடிக்குஞ்சொல், வந்தது எப்படி என விசேடிப்பது ஓடி, போயினான் முடிக்கும் சொல், எப்படி போயினான் என விசேடிப்பது விரைந்து. ஓடி விரைந்து என்பன தொழிலால் விசேடித்தன.

5. மிழற்றும் என்பது முடிக்குஞ் சொல். எப்படி மிழற்றும் என விசேடிப்பன வெய்ய சிறிய என்பன. அவை பண்பு. (வெய்யனவாய்ச் சிறியனவாய் மிழற்றும் செவ்வாய் என்க)

6. தெரிகிற்பான் குறிப்பு வினைமுற்று, முடிக்குஞ்சொல் அதை விசேடிப்பது செல்வன் என்பது. செல்வன் என்பதன் பொருள் குறிப்பாகவே உணரப்படுவது. அதனால் அது குறிப்பாக விசேடித்ததாம். புதுவதன் என்பதன் பொருளும் குறிப்பாகவே உணரப்படுவது. அணியன் என்பது முடிக்குஞ் சொல். அது எத்தகையது என்பதைப் புதுவது என்னும் சொல் தன்குறிப்புப் பொருளால் விசேடித்தது.