பக்கம் எண் :

வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60381

‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந்-84) என்பது முதலாயின செய்தென் எச்சம் முற்றாய்த் திரிந்தன வென்றும், ‘ஒடித்துண்டு எஞ்சிய’ என்பது முதலாயின செயவென் எச்சம் செய்தென் எச்சமாய்த் திரிந்தன என்றும் முன்னர் உரைத்தாரால் உரையாசிரியர் எனின், 11‘பெயர்த்தனென் முயங்க’ என்பது முதலாயின எச்சத் திரிபாயின் எச்சப் பொருள் உணர்த்துவதல்லது இடமும் பாலும் உணர்த்தற்பால வல்ல; எச்சப் பொருண்மை


11. 1 பெயர்த்து எனும் எச்சம் பெயர்தனென் எனமுற்றாய்த் திரிந்தது என்பது உரையாசிரியர் கொள்கை. சேனாவரையர் அதைமறுக்குமாறு :-

எச்சம் என்பது மூன்றிடத்துக்கும் ஐந்து பாலுக்கும்பொது. எனவே இடம்பால் உணர்த்தாது. முற்றுஉணர்த்தும் பெயர்த்து என்பது இடம்பால் உணர்த்தவில்லை. பெயர்தனென் என்பது தன்மையிடமும் பெண்பாலும் உணர்த்தும் அதனால் எச்சம் திரிந்தது என்னலாகாது. முற்றே எச்சப் பொருளில் திரிந்து வந்தது என்னல் வேண்டும்.

2 முற்று பெயர் கொண்டு முடியும்; பெயர்த்தனேன் என்பது முயங்க என வினைகொண்டு முடிந்தது. அதனால் சொல்முடிபு கொண்டு பெயர்த்து என்னும் எச்சமே பெயர்த்தனென் என முற்றாய்த் திரிந்தது என்னலாம் எனக் கூறுவார்க்கு மறுப்பு :- மார் ஈற்று வினைமுற்று வினையொடு முடிந்தாலும் வினைமுற்றே என்று ஆகுமே தவிர அது எச்சமாகாது. வினையொடு முடியும் மார் ஈற்று வினைமுற்றை எச்சத்திரிபாகக் கொள்ளாமைபோல வினைகொண்டு முடியும் பெயர்த்தனென் என்பதையும் எச்சத் திரிபாகக் கொள்ளல் கூடாது.

3. பெயர்த்து என்பது பெயர்த்தனன் திரிந்தது என்றால் கண்ணியன் வில்லன் என்பன அவற்றின் திரிபு என வினவின் அவற்றிற்குரிய வினையெச்சங்கள் இல்லாமை முற்றே எச்சப் பொருளில் திரியும் என்னலாயேன்றி எச்சம் முற்றாய்த்திரியும் என்னலாகாது.