யாவது மூன்றிடத்திற்கும் ஐந்து பாற்கும் பொதுவாகிய வினை நிகழ்ச்சி யன்றே? அவ்வாறன்றி முற்றுச் சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலும் உணர்த்தலின் அவை முற்றுத்திரிசொல் எனவே படும். சொல்நிலை யுணர்ந்து வினைகோடல் மாத்திரத்தான் வினையெச்சம் எனின்-மாரைக்கிளவியும் வினையொடு முடியும் வேற்றுமையும் பிறவும் எல்லாம் வினையெச்சமாவான் செல்லும். அதனான் அவர்க்கது கருத்தன்றென்க. அல்ல தூஉம் ‘கண்ணியன் வில்லன் வரும்’ என வினைக் குறிப்பு முற்றாய்த் திரிதற் கேற்பதோர் வினையெச்சம் இன்மையானும் அது கருத்தன்மையறிக. 12‘ஒடித்துண் டெஞ்சிய’ என்பதூஉம், ‘ஞாயிறுபட்டு
12. உண்டு என்னும் (யானையின்) வினை எஞ்சிய என்னும் பிற (மரத்தின்) வினை கொண்டது. செய்து என்வாய்பாட்டு வினையெச்சம் தன் கருத்தா வினையே கொள்ள வேண்டும். அதனால் பிறகருத்தா வினை கொள்ளுதற்குரிய செய என்னும் வாய்பாட்டு எச்சமே (உண்ண என்பதே) உண்டு எனச்செய்து என்னும் வாய்பாடாகத் திரிந்தது என்பது உரையாசிரியர் கருத்து. இதன்மறுப்பு :- செய என்னும் வாய்பாடு மூன்று காலத்துக்கும் உரியது; செய்து என்னும் வாய்பாடு இறந்த காலத்துக்கேயுரியது. அதனால் முக்காலத்துக்கும் உரிய செய என்பது இறந்த காலத்துக்கேயுரிய செய்து என்னும் வாய்பாடாகத் திரிந்தது என்றல் பொருந்தாது. செய என்னும் வாய்பாடு இறந்த காலத்தையும் காட்டுமாதலின் அந்த வகையில் திரியும் எனக்கொள்ளலாமே என வினவலாம். அதிலும் ஓர் குறையுண்டு. செய என்பது இறந்த காலம் காட்டுவது காரணப்பொருளாய் வரும்போதுதான். ‘மழைபெய்யக்குளம் நிறைந்தது’ என்பதில் பெய்ய என்னும் செய்வென் வாய்பாட்டு எச்சம் இறந்த காலத்தில் குளம் நிறைவதற்குக் காரணமாய் வந்தது. அதுபோல உண்டது எஞ்சுதற்குக் காரணம் ஆகாது. இவ்வாறே ஞாயிறு படுதல் வந்ததற்குக் காரணமாகாது. எப்பொழுதுவந்தான் என்பதற்குவிடையாக பட்டபின் அல்லது படாநிற்கவந்தான் எனவருமேயன்றிக் காரணமாகாமையுணர்க. |