பக்கம் எண் :

384வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60்

‘மோயினள் உயிர்த்தகாலை’ எனவும், ஒலி சினைவேங்கை கொய்குவம் ‘சென்றுழி’ எனவும், ‘கண்ணியன் வில்லன் வரும்’ எனவும் வரும். அவை வினையெச்ச முற்றாகி வந்தன. இவற்றுள் ‘மோந்து’ என்பது ‘மோயினள்’ எனவும், ‘கொய்ய’ என்பது ‘கொய்குவம்’ எனவும், ‘கண்ணியணிந்து வில்லையேந்தி’ என்பன ‘கண்ணியன் வில்லன்’ எனவும் முற்று வாய்பாட்டான் வரினும் எச்சப் பொருண்மைத் தாகலின் வினையெச்சம் எனப்பட்டன.

அஃதேல் முற்று என்பது ஒன்று இல்லையால் முற்றும் எச்சப் பொருண்மைத்தாய் வருதலின் எனின், அஃதாமிடனும் ஆகாதவிடனும் அறிதல் வேண்டும் என்பது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். ‘உரற்கால்யானை ஒடித்துண் டெஞ்சிய - வாய்வரி நீழல் துஞ்சும்’ (குறுந். 232) என்றவழி ‘உண்டு’ என்பது வினை முதல் வினையொடு முடியாமையின் ‘உண்ண’ வெனத் திரித்தல் வேண்டிற்று. இந்நிகரான ஈறு திரிந்தன. ‘மருந்துண்டு நோய் தீர்ந்தான், ‘மழை பெய்ய மரங்குழைத்தது’ என்பனவற்றைப் பிரித்து நோக்க, மருந்துண்டலான்’ ‘மழை பெய்தலான்’ என வேற்றுமைப் பொருள் பட்டன.

அஃதேல் 1இவை வேற்றுமை மயங்கிலுட் கூறப்பட்டனவன்றோ வெனின், ஆண்டு வேற்றுமைப் பொருள் வினைச் சொல்லானும் விளங்கும் என அதன் இலக்கணம் கூறினார். ஈண்டு வினையெச்சம் வேற்றுமைப் பொருள்படும் என்று இதன் இலக்கணம் கூறினார் என்க. வினையெஞ்சு கிளவியும்’ என்ற உம்மை இறந்தது தழீஇயிற்று.

நச்

இது வினையெச்சம் முதலியன வேறுபெயர் பெறும் என்கின்றது.

இ-ள் : வினையெஞ்சு கிளவியும் வினையெச்சமாகிய சொற்களும் (உம்மையால் பெயரெச்சமாகிய சொற்களும் முற்றுச் சொற்களும்), வேறு பல்குறிய-முற்கூறிய பெயர்களோடு வேறு வேறாகப் பல பெயர்களையும் உடையவாம், எ-று.


1. இவை-மருந்துண்டு நோய் தீர்ந்தான் முதலியன,