பக்கம் எண் :

தொல்காப்பியம்-உரைவளம்385

உ-ம் : 1பெயர்த்தனென் முயங்கயான் (குறுந்-84) இது வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று.

2‘வந்தனை சென்மோ வளைமெய்பரப்ப’-இது வினையெச்ச முன்னிலைத் தெரிநிலை முற்று.

3‘முகந்தனர் கொடுப் (புறம்.33, ‘மோயினள் உயிர்த்த காலை’ (அகம்.5) இவை வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று.

‘ஒலிசினைவேங்கை 4‘கொய்குவம் சென்றுழி’- இது வினையெச்ச உளப்பாட்டுத் தன்மைத் தெரிநிலை முற்று.

5‘வறுவியேன் பெயர்கோ வாள்மேம் படுந’ (புறம் 209)-இது வினையெச்சத் தன்மைவினைக் குறிப்புமுற்று.

‘நன்னர் நறுநுதல் 6நயந்தனை நீவி’ (கலி. 21), ‘வெள் வேல்வலத்திர்’ (கலி.4) *இவை வினையெச்ச முன்னிலை வினைக் குறிப்பு முற்று.

‘சுற்றமை 7வில்லர் சுரிவளர் 8பித்தையர்-அற்றம் பார்த்தங்கும் கடுங்கண் மறவர்’ (கலி.4) - இவை வினையெச்சப் படர்க்கை வினைக் குறிப்பு முற்று.

இன்னும் வேறு வேறு பெயர் பெற்று வருவனவும் கொள்க.

‘எல்வளை நெகிழ்த்தோர்க் கல்லல் 9உறீஇயர்’
‘உள்ளேன் தோழி 10படீஇயர் என் கண்ணே’
11‘கேட்டீவா யாயின்’       (கலி.93)

என்பன வினையெச்ச வினைத்திரிசொல்.


1. பெயர்த்தனனாய் முயங்க 2. வந்தனையாய்ச் செல்வாய் 3, முகந்தனராய்க் கொடுப்ப 4. கொய்குவமாய்ச் சென்றுழி. 5. வறுவியேனாய்ப் பெயர்வனோ 6. நயந்தனையாய் நீவி 7 வில்லராய் 8. பித்தையராய்

9 உற என்பது திரிந்தது 10. பட என்பது திரிந்தது

11. கேட்பின் என்பது திரிந்தது.

* இத்தொடர் இவை வினையெச்ச முன்னிலைவினை (தெரிநிலை)யும் குறிப்பு முற்றும் என்னும் பொருளது.