386 | வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60் |
இங்ஙனம் வினையெச்சம் திரிந்துநிற்கும் எனவே, ஈறு திரிந்து நிற்கும் என வினையியலுட் காட்டியவற்றிற்கும் இதுவே விதியாயிற்று. இனி, பெயரெச்சம் வேறு பெயர் பெறுமாறு : ‘அவர் 1தம்முளான் தருமதத்தன் என்பான்’ (சீவக. 242) எனவும், 2கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற் சுரியலம் பொருநனைக் காணிரோ’ (அகம். 76) ‘குவளை யேயள வுள்ள 3கொழுங்கணாள் அவளையே ‘ (சீவக 243) எனவும், 4‘புரிமாலையர் பாடினியரும்’ எனவும் வந்தன உயர்திணை முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சம் படர்க்கை வினைக் குறிப்பு முற்று. ‘பெருவரை 5மிசையது நெடுவெள் ளருவி’ (குறுந். 78) 6‘தெரிநடைய மாகளிறு தன்தாள் பாடுநர்க்கு நன்கருளியும்’ இவை அஃறிணை யிருபாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கைவினைக் குறிப்புமுற்று. 7’பெருவேட் கையேன் எற்பிரிந்து’ இது பெயரெச்சத் தன்மை யொருமை வினைக்குறிப்பு முற்று.
1. தம்முளானாகிய தருமதத்தன். 2. கச்சிளனாய் கழலினனாய மார்பினனாய-பொருநன். 3. கொழுங்கண்ணாளாய *அவனை. 4. புரிமாலையராய பாடினியரும். 5. மிசையதாகிய அருவி. 6. தெரிநடையவாகிய களிறு. 7. பெருவேட்கையேனாகிய என்னை. |