பக்கம் எண் :

தொல்காப்பியம்-உரைவளம்387

‘கண்புரை 8காதலேம் எம்மும் உள்ளாள்’

இதுபெயரெச்சத் தன்மை யுளப்பாட்டுப் பன்மை வினைக் குறிப்பு முற்று.

‘உலங்கொள் 9தோளினை ஒருநின்னால்’

இது பெயரெச்ச முன்னிலை ஒருமை வினைக்குறிப்பு முற்று.

‘வினை 10வேட்கையிர் வீரர் வம்மின்’

இது பெயரெச்ச முன்னிலைப்பன்மை வினைக் குறிப்புமுற்று.

இன்னும் வேறுவேறு பெயராய் வருவனவும் கொள்க.

11பின்பு நூல் செய்தோர் ‘வினையெச்ச முற்று’ என்று பெயர் கூறாமல், ‘முற்று வினையெச்சம்’ என்று பெயர் கூறினாரேனும், ‘பெயரெச்ச வினைக்குறிப்பு முற்று’ என்று பெயரெச்சத்திற்குக் குறியிட்டு ஆள வேண்டுதலின், 12அதற்கும் அப்பெயரே கொள்ள வேண்டும் என்றுணர்க.

இனி, 13பாயுந்து, தூங்குந்து (புறம். 24) எனவும், 14‘சினை இய் வேந்தன் எயிற்புறத் திறுத்த’ எனவும் 15‘கடைஇயநின்மார்பு’ (கலி 77) எனவும் வருவன பெயரெச்ச வினைத்திரிசொல்.


8. காதலேமாகிய எம் (மையும்)

9. தோளினையாகிய நின்

10. வேட்கையிராகிய வீரர்

11. பின்புநூல்-வழிநூல். வழிநூல் செய்தோர் நன்னூலார் முதலியோர்.

12. அதற்கும் = முற்று வினையெச்சம் என்பதற்கும் அப்பெயரே கொள்ள வேண்டும்-வினையெச்சமுற்று என்ற பெயரே கொள்ள வேண்டும். முற்று வினையெச்சம் என்பதுபோல முற்றுப் பெயரெச்சம் எனக்கூற இயலாமையின் வினையெச்ச முற்று என்றலே நன்று என்பது கருத்து.

13. பாயும் தூங்கும் என்பவற்றின் திரிபுகள்.

14. சினந்த என்பதன் திரிபு. 15. கடவிய என்பதன் திரிபு.