388 | வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60் |
இனி, ‘கண்ணும் படுமோ 16என்றிசின்யானே’ (நற். 61) இது தன்மை முற்று வினைத் திரிசொல். ‘ஈங்கு 17வந் தீத்தந்தாய்’ (கலி.96) இது முன்னிலை முற்று வினைத் திரிசொல். 18புகழ்ந்திகு மல்லரோ’ இது படர்க்கை முற்று வினைத்திரிசொல். இவ்வாறு மூவகைப் பெயர்களும் வேறு வேறு பெயர் பெற்று நிற்றல் கூறவேண்டுதலின், இதனை இவ்வோத்தினுள் கூறினார். இங்ஙனம் பெயர்கள் கூறவே, அவற்றிற்கு உரிய இலக்கணமும் கூறினாராயிற்று. இனி ஓர் எச்சம் ஓர் எச்சமாய்த் திரிந்து வருவனவும் வேறே பெயர் பெறுதலின், அவற்றிற்கும் இதுவே இலக்கணமாம். விசேடித்து நிற்பனவும் உள என்பது உணர்த்துதற்கு ‘உரிச்சொல் மருங்கின’ என்னும் சூத்திரத்தின் பின் இதனை வைத்தார். இதனை விரவு வினையாகிய வினையெச்சமும் பெயரெச்சமும், பாலும் இடமும் காட்டி நிற்றலின் முற்று எச்சமாயத் திரிந்தது என்னாமோ? எனின், என்னாம்; ‘அணிநிலை பெறா அது’ என்னும் அகப்பாட்டினுள் (அகம். 5) ‘ஒண்ணுதல் குறுக வந்து முகமாறிக் கொள்ளாது, தனித்து, வடுக் கொளுத்தி, நக்கு, முகத்தினுரைத்து, ஒற்றி, போந்து, உயிர்த்த காலை’ என வினையெச்ச அடுக்காகச் செய்யுள் செய்கின்றவர், தம் பேரறிவுடைமை தோன்ற எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்களுள் சிலவற்றைத் திரித்துப் பாலம் இடமும் காட்டி நிற்பச் செய்யுள் செய்தாராகலின் இனிப்பெயரெச்ச வினைக் குறிப்பு முற்றிற்கும் ‘அவர்தம்மிடத்தே நின்ற தருமதத்தன்’, ‘புரிமாலை யணிந்த பாடினியர்’ எனப் பெயரெச்சம் விரிந்தவாறு காண்க. பெரும்பான்மை இங்ஙனம் செய்யுள் செய்தற்குக் காரணம் விரவுவினை பிரிவு வேறுபடூஉம் செய்தியவாய்ப் பிரிந்து நிற்குங்கால் பாலும் இடமும் காட்டும் தன்மையும் தம்முள்ளே உடைய ஆயினமையின், அவ்வெச்சம் முற்றாய்த் திரிந்தது என்பது
16. என்றேன் என்பதன் திரிபு 17. வந்தாய் என்பதன் திரிபு. 18. புகழ்ந்தோம் என்பதன் திரிபு. |