உணர்த்துதற்கு அன்றே இடையிடை வினையெச்ச வாய்ப்பாடும் உடன் ஓதி எல்லாவற்றிற்கும் ஒரு வினையே முடிபு கூறிற்று என்று உணர்க. அன்றியும் முற்று எச்சமாய்த் திரிந்து அடுக்கியும் தனித்தும் வந்து வினை கோடல் ஆசிரியர்க்குக் கருத்தாயின், சிறுப்பான்மையாய் வினை கொள்ளும். முற்றிற்குச் சூத்திரம் செய்தாற்போல, முற்றுச்சொல் அடுக்கியும், அடுக்காதும் வந்து பெயரொடு முடிதற்கு ‘அவைதாம் தத்தம் கிளவி’ (எச்ச. 33) என்று சூத்திரம் செய்தாற்போல, முற்றுச் சொல்லே எச்சமாகி அடுக்கியும் தனித்தும் வந்து வினைகொள்ளும் என்றாற் போல ஒரு சூத்திரம் செய்திலராம்; அங்ஙனம் பெரும்பான்மையும் வழங்குவதோர் இலக்கணத்திற்குச் சூத்திரம் செய்யாமையின் அவர்க்கு அது கருத்தன்மை யுணர்க. அன்றியும், வினையெச்சம் முற்றாய்த் திரிந்து பின்னும் அதன் பொருள் உணர்த்தி நிற்றல் ‘இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி’ (உயிர் மயங்.35) என்னும் சூத்திரத்தானும் உணர்க. இவ்விலக்கணத்தினது நுண்மையை யுணர்தலாற்றாப் பின்னுள்ளோர் ‘முற்றே எச்சம் ஆகலும் உரித்தே’ எனச்சூத்திரம் செய்தார். அவர் கருத்துப்பற்றிச் சேனாவரையரும் ‘முற்றெச்சமாம்’ என்றார். அது பொருந்தாமை இக்கூறிய வாற்றானும் சான்றோர் செய்யுட்கு முன்னுள்ளோர் கூறிய வுரையானும் உணர்க. இனி, ‘ஞாயிறுபட’ என்னும் செயவென் எச்சத்து அகர ஈறு பட்டு என உகரஈறாய்த் திரிந்து நின்றது’, என்றாரால் உரையாசிரியர் எனின், ‘ஞாயிறு படவந்தான்’ ‘என்பது ‘ஞாயிறு படாநிற்க வந்தான்’ என நிகழ்காலம் உணர்த்துதல் வழக்காதலின், அது திரிந்து இறந்தகாலம் உணர்த்தும் என்றல் பொருந்தாமை யுணர்க. வெள் இது வினையெச்சத்திற் குரியதோர் இயல்பு கூறுகின்றது. இ-ள் : மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறு பட்ட பல இலக்கணத்தை யுடையன, எ-று. இடைச் சொல்லும் உரிச்சொல்லும் மேற் கூறப்பட்ட இலக்கணமே யன்றிப் பிற இலக்கணமுடைய என்பது உணர்த்தினார், இனி அவையேயன்றி வினையெஞ்சு கிளவியும் பல இலக்கணத்தன என்பதுபட நின்றமையான் ‘வினையெஞ்சு |