390 | வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60் |
கிளவியும் 4என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. வினையெச்சத்தின் இலக்கணம் ஓரியல்பினவன்றித்திரிதல், வேறுபொருளுணர்த்தல், விசேடித்தல் முதலாகப் பல்வேறு திறத்தன வாகலின் ‘வேறுபல் குறிய’ என்றால். குறி-இலக்கணம். அவையாவன : செய்தென் எச்சம் வினைமுதல் வினைகொள்ளாது ‘உரற்கால்யானை ஒடித்துண்டெஞ்சியயா’ ‘ஞாயிறு பட்டு வந்தான்’ எனப்பிறிதின் வினைகோடலும், ‘மோயினள் உயிர்த்த காலை’ என அஃது ஈறு திரிதலும், ‘கண்ணியன் வில்லன் வரும்’ என முற்றுச்சொல்லது திரிபாய் வருதலும் ஓடி வந்தான் விரைந்து போயினான் எனவும், ‘வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய்’ எனவும் செவ்வன் தெரிகிற்பான், புதுவதின் இயன்ற அணியன் எனவும் தம்மை முடிக்கும் வினைக்கட்கிடந்த தொழிலும் பண்பும் குறிப்பும் உணர்த்தித் தெரிநிலை வினையும் குறிப்பு வினையுமாய் முடிக்குஞ் சொல்லை விசேடித்தலும் பிறவுமாம் என்பர் சேனாவரையர். .......................................................... ஒடித்துண் டெஞ்சிய என்பது முதலாயின செயவென் எச்சம் செய்தென் எச்சமாய்த் திரிந்தன என்றும், பெயர்த்தெனன் முயங்க’ முதலாயின செய்தென் எச்சம் முற்றாய்த்திரிந்தன வென்றும் கூறுவர் உரையாசிரியர். ‘உரற்கால் யானை ஒடித்துண் டெஞ்யயா’ எனவும் ‘ஞாயிறு பட்டு வந்தான்’ எனவும் வரும் தொடர்களில் உண்டு, பட்டு என்னும் செய்தென் எச்சங்கள் தமக்குரிய வினை முதல்வினை கொள்ளாது பிறிதின் வினைகொண்டன வாயினும் செய்தென் எச்சத்திற்குரிய இறந்த காலம் உணர்த்தலான் ஏனைக்காலத்திற்குரிய செயவென் எச்சத்தின் திரிபாகா. செயவென் எச்சம் ‘மழை பெய்ய மரந்தளிர்த்தது’ என்றாங்குக் காரணகாரியப் பொருண்மையுணர்த்தும்வழி யல்லது இறந்த காலம் உணர்த்தாது. யானை ஒடித்து உண்ணுதலும் ஞாயிறு படுதலும் யா மரம் எஞ்சுதற்கும், ஒருவன் வருதற்கும் காரணம் அன்மையான் ஈண்டுச் செயவென்எச்சம் இறந்த காலம் உணர்த்தாது எனவே, உண்டு, பட்டு என்பன செய்தேன் எச்சமாய் நின்றே தமக்குரிய இறந்த காலம் உணர்த்தின எனக்கொள்ளுதலே பொருத்தமுடைய தாகும். ஞாயிறு பட்டு வந்தான் என்பது, |