பக்கம் எண் :

தொல்காப்பியம்-உரைவளம்391

ஞாயிறு பட்டு பின்வந்தான் என இறந்த காலம் உணர்த்துதலும், ‘ஞாயிறு படவந்தான் என்பது ஞாயிறு படாநிற்க வந்தான்’ என நிகழ்கால உணர்த்துதலும் வழக்கு நோக்கி உணரத்தக்கனவாம்.

ஆதி

வினையெச்சங்களும் வேறுபட்ட குறிப்புணர்த்தும். மழை பெய்ய : பெய்ய-வினையெச்சம். ‘தொடங்கிற்று’ என அதற்குரிய வினைசேர்தல் முறைமை. ‘ஆயின்’, மழைபெய்யப் புல்முளைத்தது’ என்றால் ‘மழை பெய்ததால்’ எனப்பொருள் தந்து, ‘புல் முளைத்தது’ என மற்றொன்றின் வினைகொண்டு முடிந்தது.

‘மழை பெய்ய மேகம் கருத்தது, என்றால் ‘மழைபெய்தற்கு’ என எதிர் நடப்பை அறிவிக்கின்றது.

மாடு மிதித்து நாசமாயிற்று, புண்ணாயிற்று என மற்றொன்றின் வினையில் முடிகிறது.

வந்தால் அடிபடும்-இங்கு வாராவிடின் அடிவிழாது என எதிர்மறைப் பொருள் தருகிறது.

‘யான் உண்டசோறு’-உண்ட-பெயரெச்சம், சோறு உண்ணப்பட்டது, யான் எழுவாய்

‘பசலை யுண்டதோள்’-இங்கு உண்டது பசலையோ தோளோ யாதும் இல்லை.

இவ்வாறு வினையெச்சம் பெயரெச்சங்கள் மாறுபட்ட பொருள் தந்து நிற்கும்.

சிவ

முற்றெச்சம்

‘பெயர்த்தனென் முயங்க என்ற விடத்துப் ‘பெயர்த்தனென் என்பது ‘பெயர்த்தேன்’ என்ற பொருள் தருதலின் முற்றாக இருந்தது, ‘பெயர்த்து’ என்ற பொருளில் ஆளப்படுதலின் எச்சமாகத் திரிந்தது. ஆதலின் ‘முற்றெச்சம்’ என்பதற்கு ‘முற்றானது எச்சப் பொருளில் வருவது’ எனக்கூறலாம் சேனாவரையர் இக்கருத்துடையவரே.