பக்கம் எண் :

392முற்றெச்சம் சூ. 60்

பெயர்த்து என்றிருக்க வேண்டிய சொல்-அதாவது எச்சமாக இருக்க வேண்டிய சொல் ‘பெயர்த்தனென்’ என முற்றாம் வந்தது என்றார் இளம்பூரணர். அவர் கொள்கைப்படி முற்றெச்சம் என்பது ‘முற்றாகத் திரிந்து வந்தஎச்சம்’ என்று பொருள்படும்.

எனவே ‘முற்றெச்சம் என்பது (1) முற்றானது திரிந்த எச்சம் எனவும், (2) முற்றாகத் திரிந்த எச்சம் எனவும் இருபொருள்படும் என அறியலாம்.

இவ்விருவகைப் பொருளும் பொருந்துமேனும் ஆசிரியர் எதைக் கருதியிருப்பார் ? “வினையெச்சத்துக்குக் கூறப்பட்ட இலக்கண முடிபுகளேயன்றி வேறுபட்ட முடிபுகளும் வினையெச்சம் கொள்ளும்” என்ற பொதுவான கருத்தில் “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்றார். வினையெச்சமானது வேறுபட்ட இலக்கணம் பெறுதல் என்பது (1) தனக்கு இயல்பாகவுள்ள ஒரு வாய்ப்பாட்டு எச்ச நிலையில் திரிந்து வேறுவாய்பாட்டு எச்ச நிலையில் வருதலும், (2) தன்எச்சநிலை திரிந்து முற்று நிலையில் வருதலும் என இருவகைப்படும் என்பர் இளம்பூரணர்.

“உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய”       (குறுந். 232)
“பெயர்த்தனென் முயங்க”       (குறுந். 84)

என்பன முறையே அவற்றுக்குக் காட்டுகளாம்.

எனவே, வினையெச்சம் வேறுபட்ட இலக்கணத்ததாய் வரும் என்றமையால் முற்றெச்சம் என்பது, எச்சமாக இருப்பதே முற்றாகத் திரிந்து வருவது என்னும் பொருளுடையதாம் என்னலாம் முற்றுஎச்சம்-முற்றாகத் திரிந்த எச்சம். இது இளம்பூரணர் கருத்து.

சேனாவரையர் கருத்து வருமாறு:- இச்சூத்திரத்துக்குச் சேனாவரையர் உரை கூறியபோது “வேறுபட்ட பல இலக்கணங்களை வினையெச்சம் கொள்ளும்” என்று கூறி, அவற்றுள் ஒன்றாக,

“மோயினள் உயிர்த்த காலை” எனவும்,

“கண்ணியன் வில்லன் வரும் எனவும் முற்றுச் சொல்லது திரிபாய் வருதலும் கூறினர். எனவே, முற்றுச்சொல் சொல்