பக்கம் எண் :

எச்சவியல் சூ. 639

இவை நான்கு சொல்லினும் இயற்சொல் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகி வரும். திரிசொல்லும் திசைச்சொல்லும் பெரும்பான்மை பெயரும் சிறுபான்மை வினையுமாகிவரும். வடசொல் பெயராயல்லது வாராது.

நச்.

இதுவுமது.

இ-ள் : சிதைந்தன வரினும் - பொது எழுத்தான் இயன்றனவேயன்றி வடவெழுத்தான் இயன்ற வடசொல் சிதைந்துவரினும், இயைந்தன வரையார்-பொருத்தமுடையன செய்யுளிடத்து நீக்கார், எ-று.

2உ-ம் : ‘அரமிய வியலகத் தியம்பும்’       (அகம் 124)
  ‘தசநான் கெய்திய பணைமருள் நோன்தாள்       (நெடுநல் 115)
‘வாதிகையன்ன கவைக்கதிர் இறைஞ்சி’       (மலைபடு 113)
‘கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை’       (புறம் 378)
‘பேதையல்ல மேதையங் குறுமகள்’
‘தைப்பமை சருமத்து’

என்றாற்போல்வன சான்றோர் செய்யுட்கண் சிதைந்து வந்தன.

இனி, தந்திரம், சூத்திரம், விருத்தி, அருத்தாபத்தி, உத்தி என்றாற் போல்வன நூலுள் சிதைந்து வந்தன. பங்கயம், இடபம், விசயம், இருடிகள், மேகம், பந்தம், மயானம், விடம், துங்கம், பலம், பாரம், சர்ச்சனா, சாதி, சேனை, கித்தி, சாதனம், அயன், அரி, அரன், ஆரம், அருகம், சிங்கம், மோக்கம், காமம், பக்கம், சூலம், சதம், போதகம், போகம், சுத்தம், சலம், மோகம், யோகம், வந்தனை, வேலை, சாலை, மாலை, உவமை, வனிதை, புரி, மேதினி, குமரி, கதி, அரங்கம், இலங்கை, இயக்கன், உலோபம், உலோகம், நிருத்தம், கீதம், வாச்சியம், வச்சிரம், அருத்தம், கருமம், கருப்பம், காப்பியம்.


2. அரமியம், தசம், வாதி, இராமன், சீதை, மேதை, சருமத்து என்பன சிதைந்தன.