பக்கம் எண் :

394முற்றெச்சம் சூ. 60

மற்றைய வினைமுற்றுகள் வினையொடு முடிந்தால திரிதல் உண்டு. இது கொண்டு பார்க்கும்போது வினைமுற்றே எச்சமாகத் திரியும் என்பது பெறப்படும். இத்தெளிவினால்தான் நன்னூலாரும் வினைமுற்றே வினையெச்ச மாகலும்” (நன். 351) என்றார்.

முடிவாக முற்றெச்சம் என்பதற்கு ‘முற்றுச் சொல்லே எச்சமாகத் திரிவது’ என்னும் பொருளே சிறக்கும் என்னலாம்.

(இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் 1. பதிப்பாசிரியர் ச. அகத்தியலிங்கம், க. பாலசுப்பிரமணியன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (1974).

தொடர்மொழிப் பொருள் வேறுபாடு

451. உரையிடத் தியலு முடனிலை யறிதல்       (61)
  
 (உரை இடத்து இயலும் உடன்நிலை அறிதல்)

ஆ. மொ. இல.

One must know the position of words
which denote contradictory senses
standing together in speech from the
context.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உலகத்து மாறுகொண்டு வேறுபட்டியலும் சொற்களவை அமைக என்பது உணர்த்துதல் நுதலிற்று.

உரை : 1கட்டுரை யுரைக்கு மிடத்து நடக்கும் ஒருங்கு நிலையும், எ-று.


1. கட்டுரையுரைக்குமிடத்து ஒருங்குநிலையும் நடக்கும் என மாறுக. கட்டுரை நடக்குமிடத்து-உரையாடுமிடத்து. ஒருங்கு நிலையும் இரு வேறு சொற்கள் சேர்ந்து வருதலும், நடக்கும்-நிகழும்.