பக்கம் எண் :

396தொடர்மொழிப் பொருள் வேறுபடுதல் சூ. 61

‡இ-ள் : உரை யென்பது தொடர்மொழி. முற்றுச் சொல் எச்சமாகிவருதலும், வினையெச்சம் ஈறுதிரிதலும், தொடர் மொழிக்கண் முடிக்கும் சொல்லோடு கூடி நின்ற நிலைமையை யறிந்து கொள்க, எ-று.

‘மோயின ளுயிர்த்தகாலை’ என்றவழி ‘உயிர்த்தல்’ என்னும் வினையொடு நிற்றலின் ‘மோயினள்’ என்பது எச்சமாயிற்று. அல்லாதவழி முற்றாயே நிற்கும். ஞாயிறு பட்டு வந்தான் என்றவழி ‘வந்தான்’ என்பதற்குப் பட்டென்பது இல்லாமையிற் பட எனத்திரித்தல் வேண்டிற்று. பிறவு மன்ன.

நச்

இது தொடர்மொழிப் பொருள் வேறுபாடு கூறுகின்றது.

1இள் : உரையிடத்து இயலும் - ஓர் எச்சவாய் படாகாக் கூறும் இடத்தது தானே மற்றோர் எச்சவாய்பாட்டிற்கும் ஏற்று நடக்கும், உடனிலை அறிதல்-கூட்டத்தினை யறிந்து தொடர்மொழிக்கு ஏற்ப வெவ்வேறாகப் பொருள் உரைக்க, எ-று.

உ-ம் : ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்       (கிளவி.4)

என்புழி ‘பெண்மை கட்ட வேண்டி ஆண்மை திரிந்த’ என வினையெச்ச வாய்பாடாயும், ‘பெண்மை சுட்டிய பெயர் நிலைக்கிளவி’ எனப்பெயரெச்ச வாய்பாடாயும் நின்றவாறு காண்க.

2‘ஆடிய கூத்தனும் வந்தான் அவனோடு
கூடிய கூத்தியையும் கொண்டு’


‡ இவ்வுரை ஆய்வுக்குரியது. வலிந்து கொண்ட வுரையாகும்.

1. இவர் உரையும் ஆய்வுக்குரியது.

2. ஆடிய கூத்தன் - பெயரெச்சத்தொடர், ஆடிய வந்தான் - வினையெச்சத்தொடர். கூடியகூத்தி-பெயரெச்சத்தொடர், கூடியகொண்டு-வினையெச்சத்தொடர்.