என்றாற் போல்வனவும், சான்றோர் செய்யுட்கண் இவ்வாறு வருவனவும், பிறவும் இதனான் முடித்துக் கொள்க. இன்னும் ‘உடனிலை’ என்றதனானே ‘ஓடி வந்தான், விரைந்து போயினான்’ என 3முடிக்கும் வினையோடு உடன் நிகழ்வனவும் கொள்க. இச்சூத்திரத்திற்கு ‘வழக்கிடத்து உடன் நிற்கப்பால அல்லனவற்றது உடனிலை போற்றுக’ என்று பொருள் கூறி, ‘இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது காட்டினராரால் 4உரையாசிரியர் எனின், அது சிறப்பின்கண் வரும் நான்காம் வேற்றுமைப் பொருளாய் அடங்குதலானும், சிறிது என்பது பெருமையை விசேடித்து நிற்றலானும், அதுதான் 5முன்னர்ப் பெறப்பட்டமையானும் இவ்வெச்ச மயக்கம் கூறுதலே ஆசிரியர் கருத்து என்று உணர்க. வெள் இது வழக்கின்கண் பயிலும் சொல் வேறுபாடு கூறுகின்றது. இ-ள் : வழக்கின் கண் உடன் நிற்கற்பாலன அல்லாத சொற்கள் உடன்நிற்றலை அறிந்து கொள்க, எ-று. ஈண்டு உடன்நிலை என்றது தம்முள் மாறுபட்ட சொற்கள் ஒருங்கு நிற்றலை. உ-ம் : இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது எனவரும் உடன் நிற்றற்குரியவல்லாத சிறுமையும் பெருமையும் உடன் நின்றவாறு காண்க.
3. முடிக்கும் வினையோடு முடிதல் = ஓடுதல் வந்தான் என்பதிலேயே அடங்குதலும் விரைதல் போயினான் என்பதிலேயே அடங்குதலும் உணர்க. 4. சேனாவரையரும் காட்டினர். 5. இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே எச்ச 59 என்னும் சூத்திரத்தில் |