398 | தொடர்மொழிப் பொருள் வேறுபடுதல் சூ. 61 |
ஆதி சொல்லும் உரையினால் அதன் உடன் சேர்ந்தவற்றையும் அறிதல் ஆகும். இது சிறிது என்று உரைப்பின் அது பெரிது. அவர் நன்கு பாடுவார் எனின் அடுத்தவர் பாட்டு சிறப்பில்லை என்று அறிகிறோம். இதுதவிர ‘எடுத்த மொழியினம் செப்பலும் உரித்தே’ (கிளவி. ) என்ற கருத்தில் ஒன்றைக் கொண்டு அதனைச் சேர்ந்தவற்றை அறிதலும் ஆகும் எனினும் குற்றமின்றாம். சோறு உண்டான்-சோற்றுடன் காய்கறிகள் பண்டங்கள் தண்ணீர். வெற்றிலை மென்றான்-பாக்கு புகையிலை சுண்ணாம்பு. பையெடுத்துப் பள்ளிக்குப்போனான்-புத்தகம், பென், நோட்டு அடிக்கோல். சிவ தெய்வச்சிலையார் புறனடையென்றது தேவையற்றது, உரையிடம் என்பது தொடர் மொழியிடம் என்னும் பொருளதாகாது. புறனடைச் சூத்திரத்திற்கூறிய ‘மோயினள் உயிர்த்த காலை’ முதலிய உதாரணங்கள் ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ என்பதிலேயே அடங்கும். நச்சினார்க்கினியர் ‘உரையிடம்’ என்பதற்கு ‘ஓர் எச்ச வாய்பாடாக வுரைக்குமிடத்து’ என்பதும் ‘உடனிலை’ என்பதற்கு ‘மற்றோர் எச்ச வாய்பாட்டிற்கும் ஏற்று நடக்கும் கூட்டம்’ என்றும் கூறும் உரையும் வலிந்து கொண்டதாதலின் சிறவாது. மற்றையோர் உரையே சிறக்கும். 452. | முன்னத்தி னுணருங் கிளவியு முளவே | | யின்ன வென்னுஞ் சொன்முறை யான (62) | | | | (முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே இன்ன என்னும் சொல் முறையான) |
|