ஆ. மொ. இல. There are words the nature of which can be understood by inference only பி. இ. நூ. நன். 408 முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே. இ. வி. 354 தொல். சூத்திரமே. முத்து. ஒ. 123 முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் சொற்கண்ணதோர் பொருள் படுதல் வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று. உரை : சொல்லின விடத்துச் சொற்கிடந்தவாறே குறிப்பினாற்கொண்டு உணரப்படும் பொருளும் உள; சொற்கள் யாண்டாயினும் மற்று இன்னவென்று தன்மை வேறுபாடு சொல்லுதல் முறைக்கண், எ-று. வ-று : ‘செஞ்செவி வெள்ளொக்கலர்’ எனவும், ‘குழை கொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர்’ எனவும் வரும். 1’செஞ்செவி வெள்ளொக்கலர்’ என்றால் உதிரம் சொரியும் செவியர், வெளிய சுற்றத்தார் என்பதன்று; செவியெல்லாம் சாலச் செம்பொன் அணிந்து முட்டில் செல்வத்தார் கிளையுடையர் என்றவாறு. ‘குழை கொண்டு கோழியெறியும்’ என்றக்காலும் 1கோழி
1. சேனா விளக்கம் பார்க்க. 1. கோழியெறிதல் என்று உணரற் பாலதை முட்டில் செல்வத்தார் என்பதாக உணரற்பாற்று. |