400 | தொடர்மொழிப் பொருள் வேறுபடுதல் சூ. 62 |
யெறிதல் என்று உணரற்பாலது, முட்டில் செல்வத்தார் என்பது உணரற்பாற்று. சேனா இ-ள் : சொல்லானன்றி சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப்படும் சொல்லும் உள; இப்பொருள் இத்தன்மைய வென்று சொல்லுதற்கண், எ-று. உ-ம் : ‘செஞ்செவி வெள்ளொக்கலர்’ என்புழி மணியும் பொன்னும் அணிந்த செவி என்றும் வெளியது உடுத்த சுற்றம் என்றும் குறிப்பான் உணரப்பட்டவாறு கண்டு கொள்க. ‘குழை கொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர்’ என்புழி அன்ன பெருஞ் செல்வத்தார் என்பதூஉம் குறிப்பால் உணரப்படும். இது, ‘தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும்’ (சொல். 157) என்புழி அடங்கும் எனின், ஆண்டுப் பொருள்நிலை இருவகைத் தென்பதல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பிற்றோன்றும் என்னும் வேறுபாடு பெறப் படாமையான் ஆண்டடங்கா தென்பது. இதுவும் மேலை யோத்துக்களுள் உணர்த்துதற்கு இயைபின்மையான் ஈண்டுணர்த்தினார். தெய் மனக் கருத்தினாற் பொருள் உணரும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : சொல்லினா னன்றி இத்தன்மையை வென்னும் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினாற் பொருள் உணரப்படும் சொல்லும் உள, எ-று. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. 2தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி, அஃதாண் டவள்செய்தது” (குறள் 1279) என்றவழி இருப்போமாயின் வளைகழன்று தோள்
2. பொருள் : அவர் பிரியன் ஈண்டிருப்பின் இவை நில்லாவெனத் தன் தொடியை நோக்கி, அதற்கேதுவாக இவைமெலியும் எனத் தன்மென் தோள்களையும் நோக்கி, பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடத்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காய் இருந்தது. |