பக்கம் எண் :

தொடர்மொழிப் பொருள் வேறுபடுதல் சூ. 62401

மெலியும் எனக் கருதி நடக்க வல்லீராகல் வேண்டும் என அடியை நோக்கினாளாதலான் உடன்போதற்குக் கருதினாள் என இப்பொருளெல்லாம் அவள் குறிப்பினால் உணர நின்றவாறு கண்டு கொள்க.

இது சொல்லினான் உணராமையான் எடுத்தோதல் வேண்டிற்று. பிறவும் இந்நிகரன அறிந்து கொள்க.

நச்

இது வினைக் குறிப்புச்சொல் பொருள்தரும் வேறுபாடு கூறுகின்றது.

இ-ள் : இன்ன என்னும் சொல் முறையான்-இத்தன்மைய என்று சொல்லப்படும் வினைக்குறிப்புச் சொற்கள் பொருள் தரும் முறைமையிடத்து, முன்னத்தின் உணரும் கிளவியும் உள அவற்றுள் சில நுண்ணுணர்வு உடையோர்க்குக் குறிப்பினால் 1தெரிநிலைப் பொருள் உணரப்படும் சொற்களும் உள அவற்றை உணர்க, எ-று.

உம்மையால் தெரிநிலைப் பொருள் உணரப்படாத சொற்களும் உள என்று உணர்க. தெரிநிலைப் பொருள் உணர்த்துவன 2வினையெச்ச வினைக்குறிப்பு முற்றும் 3பெயரெச்ச வினைக்குறிப்பு முற்றுமாம். தெரிநிலைப் பொருள் உணர்த்தாதன ஏனை வினைக்குறிப்பு முற்றாம்.

முருகாற்றுப்படையுள்,


1. தெரிநிலைப் பொருள் உணரப்படும் சொற்கள்-காலம் காட்டுவதால் தெரிலைப் பொருள் என உணரப்படும் சொற்கள்.

2. வினையெச்சப் பொருளில்வரும் குறிப்பு வினைமுற்று.

3. பெயரெச்சப் பொருளில்வரும் குறிப்பு வினைமுற்று.