பக்கம் எண் :

402தொல்காப்பியம்-உரைவளம்

கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
முழுவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து

குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே. (திருமுரு 20-8-217 என்புழி வந்த வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுகள் 1ஆக்கம் பெற்றுப் பொருள் உணர்த்துங்கால், கச்சைக்கட்டி, கழலை யணிந்து, கண்ணியைச்சூடி, குழலையூதி, கோட்டைக் குறைத்து பல்லியங்களை எழுப்பி, தகரைப் பின்னிட்டு, மயிலை ஏறி, கொடியை உயர்த்து, வளர்ந்து, தோளிலே தொடியையணிந்து, துகிலை யுடுத்து, ஏந்தி, தழீஈ, தலைக்கை கொடுத்து ஆடலும் அவற்கு நிலைநின்ற பண்பு” எனச் செய்தென் எச்சப் பொருள் உணர்த்தி நின்றவாறு காண்க.

முன்னர்க் காட்டிய பெயரெச்ச வினைக் குறிப்பு முற்றுகட்கும் தெரிநிலை வாசகமாக விரித்துப் பொருள் கூறுதற்கு ஏற்பனவற்றை யுணர்ந்து, அவற்றிற்கு ஏற்கத் தெரிநிலையாகப் பொருள் கூறிக்கொள்க.

‘நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன்’ எனக் குறிப்புமுற்று அடுக்கிப் பெயரோடு முடிபுழி, ‘நல்லனாயிருப்பன்’ அறிவுடையனாயிருப்பன், சான்றோர்மகன்’ என விரித்துப் பொருள் கூறியக்காலும் 2அத்தெரிநிலைப் பொருள் உணர்த்தாதவாறு காண்க.


1. சேனா வரையரும் உரையாசிரியர் கருத்தினரே.

2. காலம் உணர்த்தாமையைக் குறித்தது. நல்லன் என்பது நல்லனாய் இருப்பன் என விரிந்தும் காலம் உணர்த்தவில்லை.