தொடர்மொழிப் பொருள் வேறுபடுதல் | 403 |
இச்சூத்திரத்திற்கு 1உரையாசிரியர் சொல்லுவான் குறிப்பால் பொருள் உணரப்படும் சொற்களும் உள, இப்பொருள் இத்தன்மையது என்று கூறுதற்கண்’ எனப் பொருள் கூறி, செஞ்செவி வெள்ளொக்கலர் என்பது காட்டினாரால் எனின் அது குறிப்பின் தோன்றலினது வேறுபாடாம் என மறுக்க. வெள் இது சொற்கண் வருவதோர் பொருள் வேறுபாடு கூறுகின்றது. இ-ள் : சொல்லா லன்றிச் சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப்படும் சொற்களும் உள. இப்பொருள் இத்தன்மையன என்று சொல்லுதற்கண், எ-று. உ-ம் : செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னும் அணிந்த செவி என்றும், வெளியது உடுத்த சுற்றம் என்றும் குறிப்பால் உணரப்பட்டவாறு கண்டு கொள்க. ‘குழை கொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர்’ என்புழி அத்தகைய பெருஞ் செல்வ முடையார் என்பது குறிப்பால் உணரப்படும். ஆதி இன்னவாறு என்னும் சொல் முறையைக் கொண்டு குறிப்பால் அறியக்கூடிய பொருளும் உண்டு. 1. எல்லாம் கிடையிலேதான | 2. மூன்று கால் கொண்டவரானார் | 3. இளமை திரும்பி விட்டது | 4. புளித்த ஏப்பத்தில் இருக்கிறவர் | 5. கொடி கட்டிப் பறக்கிறது |
1. கச்சினனாய், கழலினனாய் என ஆக்கச் சொல் பெற்றுத் தெளிந்த பொருள் உணர்த்துங்கால் கச்சைக் கட்டி, கழலையணிந்து என இறந்தகால வினைப்பொருள் தருதலை இவ்வாறு எழுதினார். |