6. மஞ்சள் அரைத்தால் கரி ஆகிறது | 7. நான் தான் எங்கள் வீட்டில் குழந்தை இவை குறிப்பால் |
1. நடக்க முடியாதபடி நோயுற்றுப் படுக்கையில் கிடக்கிறார். | 2. கைத்தடி யூன்றி நடக்கிறார் | 3. காதல் வேட்கையில் இருக்கிறார் | 4. நிறைய உண்டு செழித்து இருக்கிறார் | 5. எல்லாம் வெற்றி மயம் | 6. தொட்டதெல்லாம் வெற்றி மயம் | 7. குழந்தையில்லாதவர் - என அறிவிக்கின்றன. |
சிவ குறிப்பால் பொருள் உணரும் சொல் என்பதனால் சொல் மூலமே பொருளைக்குறிப்பால் உணர்தல் வேண்டும் என்பது பெறப்படுமாதலின் தெய்வச்சிலையார் ‘தொடி நோக்கி என்னும் குறளைக்காட்டி அதன் மூலம் பெறப்படும் பொருளை முன்னத்தின் உணரும் பொருள் என்றது பொருந்தாது. உடன் போக்குக் கருதினாள் என்பது அக்குறள் மூலம் குறிப்பாற் பெறப்படுமாயினும் உடன் போக்கைக்குறித்தல் வேண்டி நிகழ்த்திய தொழில்கள் தொடிநோக்கல், மென்தோள் நோக்குதல், அடிநோக்குதல் ஆதலின் தொழில்களால் குறிப்பு உணர்த்தப்பட்டதேயன்றிச் சொற்களால் உணர்த்தப்பட்டதன்று. செஞ்செவியர் வெள்ஒக்கலர் என்பனவே பெருஞ்செல்வர், வெள்ளாடை யுடுத்தியவர் என்பனவற்றை யுணர்த்துவன. நச்சினார்க்கினியர் குறிப்பு வினைமுற்றுத் தெரிநிலைப் பொருளைக் குறிப்பால் உணர்த்துவது பற்றி இச்சூத்திரம் கூறுவதாகக் கொண்டதும் ஏற்பதற்கில்லை. குறிப்பு வினைமுற்று என்னும் பெயரே குறிப்பாற் பொருள் உணரப்படுவது என்பதைத் தெரிவித்தலாலும் குறிப்பால் உணரப்படுவதும் ஏதேனும் ஒரு காலத்துக்குரியதாகும் ஆதலினாலும் அவர் உரை போலியுரையே. |