பக்கம் எண் :

ஒரு பொருள் இருசொல் சூ. 63405

ஒரு பொருள் இரு சொல்

453. ஒரு பொருளிரு சொற் பிரிவில வரையார்      (63)
  
 (ஒரு பொருள் இருசொல் பிரிவு இல வரையார்)

ஆ. மொ. இல.

The use of two synonyms in pairs is not prohibited.

பி. இ. நூ.

நன் 397. 398

ஒரு பொருட் பலபெயர் பிரிவில் வரையார்
ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா
  ௸  ௸   ௸

இ. வி. 355, 356

முத்து. ஒ. 124

ஒரு பொருள் இருசொற் பிரிவில வரையார்.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபுவழுக்காத்தது.

1உரை : ஒரு பொருள்மேற் கிடந்த இரு சொற் பிரிவின்றி நின்றன வரையப்படா, எ-று.

வ-று : 2வையைக் கிறைவன் வயங்குதார் மாணகலம்


1. இவர் உரையைச் சேனாவரையர் மறுப்பர்.

2. பொருள் : வையைக்குத் தலைவனாகிய பாண்டியனின் விளங்கும் மாலை யணிந்த மாட்சியுடைய மார்பை ஏ தோழி ! நீ இன்று சேர்ப்பிப்பாயாக; சேர்ப்பிக்க மாட்டாயாயின் யான் இறந்து படுதலால் கூடலார் கோவாகிய அப்பாண்டியனோடு நீயும் உலகறியும் படிப்பழிச்சொல்லுக்குட்படுவாய்.