பக்கம் எண் :

406தொல்காப்பியம்-உரைவளம்

தையலாய் இன்றுநீ நல்குதி நல்காயேல்
கூடலார் கோவோடு நீயும் படுதியே
நாடறியக் கவ்வை யொருங்கு

வையைக்கு இறையெனப்பட்டானும் கோ எனப்பட்டானும் அவனாதலால் இவ்விரு சொல்லும் ஒரு பொருட்கண்மேலே நின்றன. பிறபொருட்குப் பிரியா; அங்ஙனம் நிற்பன அமையும் என்பதாம்.

இனிப் பிரிவில வரையப்படா எனவே, பிரிவுடையன வரையப்படும் என்பதாம். அஃதியாதோ வெனின்,

1கொய்தளிர்த் தண்டலைக் கூற்றப் பெருஞ்சேந்தன்
வைகலும் ஏறும் வயக்களிறே-கைதொழுதேன்
காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ்
சாலேகம் சார நட

இதனுள் ‘கூற்றப் பெருஞ் சேந்தன்’ என்றார், பின்னைச் ‘சாலேக வண்ணன் என்றார். அவையிரண்டும் சொல்லும் பிரிவுடைய; அதனான் அமையா. யாவோ பிரிவெனின், ‘காலேக வண்ணம்’ என்பது சாந்து; கூத்தப் பெருஞ்சேந்தற்கேயுரித்தாய் நிற்பதொன்றன்று. காலேக வண்ணம் என்னும் சாந்து பூசினார்க் கெல்லாம் ‘காலேக வண்ணர்’ என்று பெயராம். அதனான் பிரிவுடைத்து; அமையாது என்பது.

மேல் கிளவியாக்கத்து. ‘இயற்பெயர் கிளவியும் சுட்டுப் பெயர்க் கிளவியும்’ (கிளவி 38) என்னும், ‘சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிக்கு’ (கிளவி. 41) என்றும், ‘ஒரு பொருள்


பொருள் : கொய்தற்குரிய தளிர் தழைத்த சோலைகளையுடைய கூற்றத்துக்குரிய பெருந்சேந்தன் நாளும் ஏறிவரும் வெற்றி மிக்க களிறே ! காலேக வண்ணனாகிய அவனை யான் கண்ணாரக் காணும்படி எம் சாளரவழியாக நடப்பாயாக. உன்னைக் கை தொழுது வேண்டுகிறேன்.