ஒரு பொருள் இருசொல் சூ. 63 | 407 |
குறித்த வேறு பெயர்க்கிளவி’ (கிளவி. 42) என்றும் ஒரு பொருள் மேல் இருபெயர் வழுவும், பல பெயர் வழுவும் கூறிப்போந்தான்; அவற்றோ டிதனிடை வேற்றுமை தெரிந்து கொள்க. சேனா இ-ள் : பொருள் வேறுபாடின்றி ஒரு பொருள் மேல் வரும் இரண்டு சொற் பிரிவின்றித் தொடர்ந்துவரின் அவற்றைக் கடியார், எ-று. உ-ம் : ‘நிவந்தோங்கு பெருமலை’ எனவும், ‘துறுகல் மீமிசை யுறுகண்’ எனவும் வரும். பிரிவில என்றது வேறோர் சொல்லான் இடையிடப் படாது நிற்பன என்றவாறு, இருசொல் ஒருபொருள்மேல் வருதல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மையான் ஈண்டுக் கூறினார். வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம் தையலாய் இன்றுநீ நல்கினை நல்காயேல் கூடலார் கோவோடு நீயும் படுதியே நாடறியக் கவ்வை யொருங்கு என்புழி வையைக்கிழவன், கூடலார்கோ என்பன ஒரு பொருளை வரைந்துணர்த்தலால் பிரிவிலவாகலின் வரையப் படாவென்றும், கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலும் ஏறும் வயக்களிறே-கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகம் சார நட என்புழிக் ‘காலேக வண்ணன்’ என்பது அச்சாந்து பூசினார் எல்லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந்துணர்த்தாமையின் அவை பிரிவுடையவாம் என்றும் உரையாசிரியர் உரைத்தாரால் எனின், அற்றன்று; |