1நாணி நின்றோள் நிலைகண்டி யானும் பேணின னல்லனோ மகிழ்ந வானத்து அணங்கருங் கடவுள் அன்னோள் நின் மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே (அகம் 16) என்புழி, ‘வானத்தணங்கருங் கடவுளன்னோள்’ என்பது மகளிர்க் கெல்லாம் பொதுவாய் நாணி நின்றோளை வரைந்துணர்த்தா தாயினும் சொல்லுவாசன் குறிப்பான் அவளையே யுணர்த்தினாற் போலக் ‘காலேக வண்ணன்’ என்பதூஉம் பொதுவாயினும் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப் பெருஞ்சேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் நிற்றலான் அவர்க்கது கருத்தன்றென்க. தெய் செப்பு வழு வமைத்தலை நுதலிற்று. இ-ள் : ஒரு பொருள்மேல் இரண்டுசொற் பிரிவின்றிவரின் நீக்கப்படா, எ-று. ‘உயர்ந்தோங்கு பெருமலை, ‘உச்சிமீமிசை’ ‘நிலத்து வழி மருங்கிற் றோன்றலான’ (பெயரி. 40) என்பன ‘பிரிவில என்பதனான் ஒட்டிநிற்றல் வேண்டும். நச் இஃது ஒருசொல் இருபொருள் உணர்த்துவதோர் மரபுவழு அமைக்கின்றது. இதனை, ஒருசொல் இருபொருள் பிரிவில வரையார்’ எனமாறுக. 1இ-ள் : இருபொருள் ஒருசொல் பிரிவில வரையார் - ஒரு
1. பொருள் : மகிழ்ந! நாணி நின்றவள் தடுமாற்றம் கண்டு யானும் (தலைவி) வானத்திலுள்ள வருத்துதல் இல்லாத கடவுளாகிய அருந்ததியை யொத்தவளாகிய நின்காமக்கிழத்தியும் நின்மகனுக்குத் தாயாவது ஒக்கும் என்று அவளை விரும்பினேன் அல்லளோ. 1. உரை வேறுபாடு காண்க. இதுவலிந்து கொண்டது. |