ஒரு பொருள் இருசொல் சூ. 63 | 409 |
சொல் ஒருகால் கூறுதற்கண்ணே இரண்டு பொருளைப்புலப்படுத்தி இரண்டற்கும் பிரிவிலவாய் நிற்றலைச் சிறப்புடைய என்று சொல்லுவார் ஆசிரியர், எ-று. ‘பிரிவில’ என்றது இரண்டற்கும் ஒப்ப நிற்றலை. உ-ம் : | 2குழல் வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு | | மழலைத் தும்பி வாய்வைத்தூத’ (சிலப். 4.15, 16) |
என்புழி ‘குழல்வளர்முல்லை’ என்று கூறிய பொழுதே ஆயர் ஊதும் குழலிலே எழுந்த முல்லை என்னும் பண்ணையும், மயிரிலே கிடந்த முல்லை என்னும் பூவையும் ஒருகாலத்தே புலப்படுத்தி இரண்டற்கும் பிரிவிலவாய் நின்றவாறு காண்க. இஃது, ஒரு சொல் ஒருகால் கூறுதற்கண் இரண்டு பொருளை யுணர்த்துதல் வழுவேனும் அமைக என அமைத்தார். இதனை உவமவியலுள் ‘ஒரீஇக் கூறலும் (உவம. 33) என்னும் சூத்திரத்துச் செய்யுட்கு இலக்கணமாகக் கூறுமாறும் உணர்க. இங்ஙனம் சான்றோர் செய்யுட்களுள் பல இடத்தும் வருமாறு உணர்க. ‘வரையார்’ என்றதனான், இவை விகாரப்பட்டு நிற்பனவும் கொள்க. 1‘பாடுதும் பாவை பொற்பே’ (சீவக. 2046)
2. பொருள் : கோவலர் குழலிலே வாய்வைத்து வளரும் முல்லைப் பண்ணை ஊத எனவும், மழலை (இளந்) தும்பி கூந்தலில் உள்ள முல்லை மலரில் வாய் வைத்துத் தேனுண்ணவேண்டி ஊத எனவும் பொருள் கொள்க. 1. ‘பாடுகம் பாவை பொற்பே பற்றி மற்றெமக்கு நல்கின்’ (சீவக. 2046) என்பதில் ‘பொற்பே’ என்பதற்கு ‘அழகே’ எனப்பொருள் கோடலேயன்றிப் ‘பொன்பேய்’ எனவும் பொருள் கொள்ளுமாறு அமைந்துளது. இதில் ‘பேய்’ என்பது ‘பே’ என நின்றது விகாரம். பாவையழகு முதலாக யாவும் எமக்குக் கொடுத்தால் பாடக்கடவேம் என்றொரு பொருளும், பாவை பொன்னாற் செய்த பேய் பற்றிக் கொடுத்தால் பாடக்கடவேம் என்றொரு பொருளும் காண்க. |