பக்கம் எண் :

410தொல்காப்பியம்-உரைவளம்

என்றவழி ஒருகால் ‘பொலிவே’ என்று ஏகார வீறாயும் ஒரு கால் ‘பொன்னாற் செய்த பேய்’ என்று யகர வீறாயும் விகாரமாயும் நின்ற வாறு காண்க. இவ்வாறு வருவன பிறவும் உணர்க.

இன்னும் ‘உய்த்துக் கொண்டுணர்தல்’ என்னும் தந்திரவுத்தியான் இச்சூத்திரத்திற்குச் செவ்வனே கிடந்தவாறும் பொருள் கொள்க.

ஒரு பொருளையே உணர்த்தி நிற்கும் இரண்டு சொற்கள் தம்மிற் பிரிதல் இன்றி நிற்பன வற்றை நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று.

உ-ம் : நிவந்தோங்கு பெருமலை, துறுகல் மீமிசை என்றாற் போல்வன ஒரு சொல் இடைவராமல் அடுக்கி நிற்பனவாம்.

வெள்

இது மரபு வழுக் காக்கின்றது.

இ-ள் : பொருள் வேறுபாடின்றி ஒர பொருள்மேல் வரும் இரண்டு சொல் பிரிவின்றித் தொடர்ந்துவரின், அவற்றை நீக்கார் ஆசிரியர், எ-று.

பிரிவில ஆவன வேறோர் சொல்லான் இடைப்படாது ஒட்டி நிற்பன.

உ-ம் : ‘நிவந்தோங்கு பெருமலை’ எனவும், துறுகல் மீமிசை எனவும் வரும்.

ஆதி

ஒரு பொருள் தரும் இரு சொற்கள் பிரியாது சேர்ந்து நிற்பதும் கடிவதற்கில்லை.

உயர்ந்து ஓங்கிய மலை, தடித்துப் பருத்தபையன், குழித்து ஆழ்ந்தகண், யாதும் இல்லா ஏழைப்பையன்-முதல் இரு சொற்கள் ஒத்த பொருளுடையன. நிலைமையின் மிகுதியைக் காட்டுகிறது.