பக்கம் எண் :

பால் வழு வமைதி சூ. 64411

பால்வழுவமைதி

454 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி       (64)
  பன்மைக்காகு மிடனுமா ருண்டே
  
 (ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே).

ஆ. மொ. இல.

A noun of singular number may denote plural sense.

பி. இ. நூ.

நேமி சொ. 69.

வந்தொருமை பன்மை மயங்கினும்

நன். 380.

ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே.

இ. வி. 300.

ஒருமை பன்மையும் பன்மை ஒருமையும்
ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே.

தொ. வி. 81.

ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே.

முத்து. ஓ. 125. (தொல். சூத்திரமே)

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் பால்வழு அமைக்கின்றது.

உரை : ஒருமைசுட்டி நின்ற பெயர்ச் சொல்லும் பன்மை கொண்டு முடியும் இடனும் உடைத்து, எ-று.