பக்கம் எண் :

412தொல்காப்பியம்-உரைவளம்

வ-று :அங்கலுழ் மாமை அகுதை தந்தை
 அண்ணல் யானை யடுபோர்ச் சோழர்”       (அகம் 96)

எனவரும். இதனுள் ‘தந்தை’ என்கின்ற ஒருமை முறைப் பெயர் ‘சோழர்’ என்னும் பன்மை கொண்டு முடிந்தமையின் வழூஉவே யெனினும் அமையும் என்பது. “யான் எம்மூர் புகுவல்” என்பதும் அது.

சேனா

இ-ள் : ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மைக்காகும் இடமும் உண்டு, எ-று.

உ-ம் : ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’ (அகம் 66) என்புழித் ‘தாய்’ என்னும் ஒருமை சுட்டிய பெயர் இளையர், என்பதனாற் ‘றாயர்’ என்னும் பன்மை உணர்த்தியவாறு கண்டு கொள்க.

‘பன்மைக்காகும் இடனுமாருண்டே’ என்பது ஒருமைச்சொற் பன்மைச் சொல்லோடு தொடர்தற்குப் பொருந்துமிடம் உண்டு என்பதூஉம்படநின்றமையான் அஃதை தந்தை அண்ணல்யானை அடுபோர்ச் சோழர்’ என ஒருமைச்சொற்பன்மைச் சொல்லோடு தொடர்தலும் கண்டு கொள்க. ஈண்டு ஒருமைச்சொல் பன்மைச் சொல்லோடு மயங்குதலுடைமையான் 2ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி (கிளவி.25) என்புழி அடங்காமை யறிக.

3ஏற்புழிக் கோடல் என்பதனான் இம்மயக்கம் என்று கொள்க.


1. யான் ஒருமை, எம் பன்மை-இதனை நச்-மறுப்பர்

2. அவன் வந்தான் என்பதை அவர் வந்தார் என்பது.

3. அஃறிணைப் பெயர் பால்பகா நிலையதும் உண்டு ஆதலின் யானை வந்தது. யானை வந்தன எனவரும் உயர்திணைக்கே கொள்ளல் வேண்டும்.