பக்கம் எண் :

414தொல்காப்பியம்-உரைவளம்

‘புலையன் எறிந்த பூசற் றண்ணுமை, ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப” என்புழி ‘இளையர்’ என்னும் பன்மை ‘தாய்’ என்னும் ஒருமையோடு பொருந்தும் வழி ஒருவற்கு ஒருத்தி தாயாம் தன்மையான் வழுவின்றேனும், ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார். இவை ‘பொருள் இடையிடுதல்’ என்னும் உத்தியாம்.

இன்னும் இதனானே,

1தினைத்தா ளன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே       (குறுந். 25)

எனப் 2பன்மை சுட்டிய பெயர்ச்சொல் 3ஒருமையோடு இயைபின்றி இயைதலின் வழுவாய் அமைவதூஉம் கொள்க ‘குருகு’ என்பது இயற்பெயராதலின் அதன்கண் பன்மையோடும் 4‘கால’ என்பது இயைந்து, ‘காலனவாகிய குருகுகள்’ என நிற்பின், அஃது உண்டு என்னும் ஒருமைக்கு ஏலாமையின், ‘குருகு’ என்பது ஒருமையாயே நின்றது ஆதலின் வழுவேயாம்; ‘கள்வன்தான் ஒருவனுமே; வேறு சிலர் ஆண்டு இல்லை’


பொருள் : தலைவர் தாம் என்னை மணந்த காலத்தில் (களவிற்புணர்ந்த காலத்தில்) தினையின் தாள் போன்ற கால்களை யுடையனவாகிய ஓடும் நீரில் தம் உணவுக்காக ஆனால் மீனையே பார்க்கும் குருகுகளும் உண்டு.

இதனைப் புறனடைச் சூத்திரத்திற் (456) கொள்வர் இளம்.

2. பன்மை சுட்டிய பெயர் ‘தாம்’ என்பது

3. ஒருமை என்றது அப்பாடலின் முதலடியில் வரும் தானே, கள்வன் என்பனவற்றை

4. கால குருகு என்பது காலையுடைய குருகு எனக்கொள்ள அமைத்தது என்பது நச்சர். கருத்து. காலனவாகிய குருகு எனின் உண்டு எனும் ஒருமை வினைகொண்டு முடிதல் தவறு. உண்டு என்பது ஒருமை பன்மைப் பொது வினை என்பது நன்னூலார் கொள்கை (நன்)