பக்கம் எண் :

416தொல்காப்பியம்-உரைவளம்

உ-ம் : ‘ஏவலிளையர் தாய் வயிறு கரிப்ப’ என்புழித்தாய் என்னும் ஒருமைப்பெயர் ஏவல் இளையர் என்பதனால் தாயர் எனப்பன்மை யுணர்த்தியது.

‘பன்மைக்காகும் இடனுமாருண்டே’ என்பது, பன்மைச்சொல் ஒருமைச் சொல்லொடு தொடர்தற்குப் பொருந்தும் இடம் உண்டு என்ற பொருளும் தந்து நிற்றலால், “அஃதை தந்தை அண்ணல் யானை அடு போர்ச்சோழர்” எனத்தந்தை என்னும் ஒருமைச்சொல் சோழர் என்னும் பன்மைச் சொல்லோடு தொடர்தலும் கொள்ளப்படும்.

ஏற்புழிக் கோடலால் இம்மயக்கம் உயர்திணைக்கண்ணது என்று கொள்க.

ஆதி

ஒருமைப் பெயர் பன்மையைக்குறிக்கும் இடங்களும் உண்டு

மரம் சாய்ந்தது-மரம் ஒருமை
மரம் சாய்ந்தன-மரம் பன்மை
ஊறுகின்ற கிணறு-கிணறு பன்மை

பால் பகா அஃறிணைப் பெயர் ஒருமையாயினும் பன்மைப் பொருளில் வருகின்றது. இவ்வாறன்றி நல்லவன்-நல்லவர் எனப் பன்மை காட்டுகிறோம் ஆயினும் அது ஒருமையே.

ஆற்றுப்படையில் முன்னிலையொருமை முடிபு

455. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி
 பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே
யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்       (65)
  
 (முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கில் போற்றல் வேண்டும்.