ஆற்றுப்படையில் முன்னிலையொருமை முடிபு சூ. 65 | 417 |
ஆ. மொ. இல. The second person singular, ending in plural is permissible; this usage being allowed in ‘Arruppadai’ - the literature of guiding some to somebody else. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது செய்யுட்கு உரியதோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை : முன்னிலை சுட்டிய ஒருமைச்சொல் பன்மை கொண்டு முடியினும் வரைந்து மாற்றப்படாது; ஆற்றுப்படைச் செய்யுளிடத்து. அதனை ஆண்டுப் போற்றியுணர்க, எ-று. ‘கலம் பெறுகண்ணுளர் ஒக்கல் தலைவ’ (மலைபடு. 50) என்புழித் ‘தலைவ’ என்பது ஒருமைப் பெயர். அது, பி்ன்னை, ‘ஒருவீர் ஒருவீர் ஓம்பினிர் கழிமின்’ (மலைபடு 218) எனப்பன்மை கொண்டு முடிந்தது; முடிந்ததே யெனினும் அமைக என்பது; மற்று இதுவும் ஒருமைப்பெயர் பன்மை கொண்டு முடிதல் ஒக்கும் ஆகலின் ‘முன்னர் ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ (64) என்னும் சூத்திரத்துள் அடங்கும் பிறவெனின், அற்றன்று; முன் செய்யுள் நோக்கிச் சொல்லினார் அல்லர்; இனிச் செய்யுள் நோக்கிச் சொல்லினார். எங்ஙனம்? முன்னிலை யொருமை பன்மை கொண்டு முடிதல், ஆற்றுப்படைச் செய்யுட்கு முன்னிலைக் கட்டுரை பயின்றமையானும், மேல்தலைக் கொண்டும் அச்செய்யுள் விதியுடைத்தொன்று ஆதலானும் அதனை அமைக்க வேண்டும்? அதனாற் சொல்லினார் அதற்கே வரைந்து என்பது. மற்று, ‘ஆற்றுப்படை மருங்கினானே’ யமையாது போற்றல் வேண்டும் என்பதனால் பிறவும் உள ஈண்டுப் போற்றி யுணரப்படுவன என்பது. நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னையே குறித்த நோக்கமொடு (அகம் 210) |