பக்கம் எண் :

418தொல்காப்பியம்-உரைவளம்

என்புழித் தானும் அன்னாருள்ளாராகலின் ‘பல்லே முள்ளேம்’ எனற்பாற்றுமன ; ஆயினும் அஃது அமைக என்பது.

இனி, ‘ஏவல் இளையர் தாய் வயிறு கரிக்கும்’ எனற்பாற்றுமன் ; ஆயினும் அமைக என்பது, மற்று இளையர் பல்லாரையும் உடையதாயைச் சொல்லிற்றாகப் பெறாதோ வெனின், அற்றன்று ஆண்டு ஆண் 1பூசலாட்களாகலான் அவர்க்கெல்லாம் ஒரு தாயாதல் இயைபு இன்று என்பது.

இனி ஒருசாரார்,‘கறையணிமிடற்றனை’ என்னும் முன்னிலை யொருமை, ‘கறையணி மிடற்றினவை’ என்னும் அஃறிணைப் படர்க்கைப் பன்மையானும் முடிந்ததென்று காட்டுப. இனிக் ‘கறையணிமிடற்றினவை’ என்றது அத்தேவனார் கூளிகளை என்ப ஒருதிறத்தார். அற்றன்று பின்னையனையை யாதலின் அத்தேவனார் தம்மேல் ஏறும் ஆகலின் அமைக்க வேண்டும் என்பர் முன்னையுரைப்பார் பிறவும் இவ்வாறு வருவன போற்றி யுரைப்படும் என்றவாறு.

சேனா

இ-ள் : முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் பன்மையோடு முடிந்ததாயினும் வரையப்படாது, அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளிடத்துப் போற்றியுணரப்படும், எ-று.

கூத்தராற்றுப்படையுள் ‘கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ (மலை படு. 50) என நின்ற ஒருமைச் சொற்போய் இரும்பேரொக்கலொடு பதம்மிகப் பெறுகுவிர்’ (மலைபடு. 157) என்னும் பன்மைச் சொல்லொடு முடிந்தவாறு கண்டு கொள்க.

ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகும் இடனுமாருண்டே       (எச்ச. 64)

என்பதனான் இதுவும் அடங்குதலின் இச்சூத்திரம் வேண்டாவெனின், ‘பன்மையொடு முடியும் இடனுமாருண்டே’ என்னாது பன்மைக் காகும் இடனுமாறுண்டே’ என்றாராதலின் ஆண்டுப்


1. பூசல் ஆட்கள்-போர் வீரர்.