ஆற்றுப்படையில் முன்னிலையொருமை முடிபு சூ. 65 | 419 |
பன்மைச் சொற் கொண்டு முடியாது ஒருமைச் சொற்பன்மையுணர்த்துதலும் பன்மைச் சொல்லொடு ஒரு பொருட்டாகிய துணையாய் பயங்குதலும் உணர்த்தினார். அதனான் இக்கொண்டு முடிபு செய்யுட்குரித் தென்றமையானும் ஆண்டடங்காமையறிக. பொதுவகையான் ஆற்றுப்படை மருங்கின் என்றாராயினும் சுற்றத்தோடு சுற்றத் தலைவனை ஆற்றுப் படுத்தற் கண்ணது இம்மயக்கம் என்பது பாதுகாத்துணர்க என்பார் ‘போற்றல் வேண்டும்’ என்றார். ‘பான்மயக் குற்ற ஐயக்கிளவி (கிளவி 23) என்பதனாற்கூறிய ஒருமைப்பன்மை மயக்கம் வழுவமைதியாயினும் இலக்கணத்தோடு ஒத்து பயின்றுவரும். ஒருமை சுட்டிய பெயர் நிலைக்கிளவி பன்மைக்காதலும், முன்னிலை யொருமை பன்மையொடு முடிதலும் அன்னவன்றிச் சிறு வழக்கினவாதலின் ஆண்டுவையாது ஈண்டு வைத்தார். ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தற்கண் முன்னிலையொருமை பன்மையொடு முடிதல் வழக்கிற்கும் ஒக்கும் ஆகலான் ஆற்றுப்படையெனப் பொதுவகையாற் கூறினார். தெய் இது ஒருமை பன்மை மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : முன்னிலையைக் குறித்த ஒருமைச் சொல்பன்மையொடு முடியினும் நீக்கப்படாது. அதனை ஆற்றுப்படுக்கும் வழி பாதுகாத்துக் கூறுக, எ-று. ‘ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்’ எனவே, அஃதல்லாதவழிப் போற்றாமையும் கூறப்படுமாயிற்று. ஆற்றுப்படை மருங்கிற் போற்றலாவது ; பெரும்பாணாற்றுள் ‘புல்லென்யாக்கைப் புலவுவாய்ப்பாண’ (22) என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப் பெயர் ‘நீயிரும் பல்வேல் திரையற் படர்குவிராயின் (27) எனப்பன்மையொடு முடிந்தது. |