பக்கம் எண் :

420தொல்காப்பியம்-உரைவளம்

கூத்தராற்றுப்படையுள், ‘கலம்பெறும் கண்ணுளர் ஒக்கல் தலைவ’ (மலைபடு-50) என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப் பெயர் ‘நீயிரும் நன்னற் படர்ந்த கொள்கையொடு முடிந்தது.

இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி யாண்டுச் செல்வார் பலராயுழியே வரப்பெறுவது என்றும் தனியொருவனாயின் மயங்கப் பெறாதென்றும் கொள்க.

இனி, ஆற்றுப்படை யல்லாதவழிப் பலரில் வழியும் மயங்கப் பெறும்.

1”குறிப்பேவல் செயல்மலைக் கொளைநடை யந்நணீர்
வெவ்விடைச் செலல்மாலை யொழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும”       (கலி. 9)

எனவும்,

2மறப்பருங்காதல் இவள் ஈண்டொழிய
இறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைய       (கலி. 2)

எனவும்,

3“என்னீர் அறியாதீர் போல இவைகூறின்


1. பொருள் : குறிப்பாற் செயலாற்றும் ஐம்புலன்களும் நுங்கள் ஏவல்படிச் செயல்புரியும் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே! கொடிய இப்பாலைவழியிற் செல்லுதலை இயல்பாகவுடைய வழக்கத்தையுடையீர் ஆதலின் (நுங்களை வினவுகிறேன்) இவ்வழியில் என்மகன் ஒருவனும் பிறள் மகள் ஒருத்தியும் தங்களுக்குள்ளே கொண்டதாமறிந்த புணர்ச்சியினராய் உள்ள அன்னார் இருவரைக் கன்டனிரோ?. இப்பகுதியில் அந்தணிர், பெரும என வந்தன பன்மையொருமை மயக்கம்.

2. இதில் துணிந்தனிர், ஐய என்பன மயக்கம்.

3. இதில் நீர் அறியாதீர் எனவும் நின் எனவும் வந்தன மயக்கம்.