சிறப் பெழுத்துகளால் ஆனவை. நட்டம், ஈசுவரன் போன்ற சொற்கள் சிறப்பும் பொதுவுமான எழுத்துகளால் ஆன சொற்கள். இம்மூவகைச் சொற்களுள் ‘வடசொற்கிளவி’ என்ற நூற்பாவுக்கு வாரி, குங்குமம் போன்ற சொற்களையும், “சிதைந்தன வரினும்” என்ற நூற்பாவுக்கு சுகி, போகி, நட்டம், ஈசுவரன் போன்ற சொற்களையும் எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். எனவே, ‘சிதைந்தனவரினும் இயைந்தன வரையார்’ என்ற நூற்பா ‘வடசொற்கிளவி’ என்ற நூற்பாவை மட்டும் நோக்காமல் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என்பவை பற்றிய மூன்று நூற்பாக் களையும் சேர்த்தே நோக்குவதாகும். (இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், பதினோராவது கருத்தரங்கு (1979) ஆய்வுக் கோவை, தொகுதி 2.) செய்யுள் விகாரம் 397. | அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை | | வலிக்கும் வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் | | விரிக்கும் வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலு | | நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலு | | நாட்டல் வலிய வென்மனார் புலவர். (7) | | | | (அந்நால் சொல்லுந் தொடுக்கும் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர்) |
ஆ. மொ. இல. The poets say that when those four kinds of words are used in construction (of poetry). sonant may change into surd and Vice-Versa, phoneme may be added or elided, and phoneme may be lengthened or shortened; these changes are inevitable. |