பக்கம் எண் :

எச்சவியல் சூ. 743

பி. இ. நூ.

நேமிநாதம் -சொல்லதிகாரம் 66

மெலித்தல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும்-ஒலிக்கும்
வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாம் கற்றோர் செயல்.

நன். 155

வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.

இ.வி. 57 ௸   ௸   ௸

தொ. வி. 37

மெலிவுறின் பாவிடை மென்மை வன்மை
குறுமை நீட்சி குறுந்தொகை விரிவே
மற்றொருமொழி மூவழிக் குறைதலும் என
வேண்டுழித் தனிமொழி விகாரம் ஒன்பதே

முத்து. ஒ. 53

அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அந்நான்குவகைச் சொல்லானும் செய்யுட் செய்யுமிடத்து அவ்வறு வகைப்பட்ட விகாரமும்படச் செய்யுட் செய்யப் பெறுப என்பது உணர்த்தியவாறு.

உரை : நாட்டல் வலிய என்றது ஒருவன் நாட்டுதல் வன்மையிலக்கணத்தினை அவையுடைய, எ-று.

வலிக்கும் வழி வலித்தல் ‘குறுந்தாட்கோழி’ என்பதனைக் ‘குறுத்தாட்கோழி’ என வலித்தல்.

மெலிக்கும் வழி மெலித்தல், ‘தட்டை’ எனற்பாலதனைத் ‘தண்டை’ என மெலித்தல்.