கூத்தராற்றுப் படையுள் ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ என நின்ற முன்னிலை யொருமைச்சொல், ‘இரும்பேர் ஒக்கலொடு பத மிகப் பெறுகுவிர்’ என்னும் பன்மைச் சொல்லொடு முடிந்தவாறு காண்க. ஒருவரை யொருவர் ஆற்றுப்படுத்தற்கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல் செய்யுட்கேயன்றி வழக்கிற்கும் ஒக்கும் ஆதலால் ஆற்றுப்படையெனப் பொதுவகையாற் கூறினார். ஆதி முன்னிலை யொருமையாகத் தொடங்கியது பன்மையாக முடியினும் ஆற்றுப்படையில் தள்ளுவதற்கில்லை; ஏற்கத் தக்கதே. ஒக்கல்தலைவ - ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் தலைவ - ஒருமை, பெறுகுவிர் எனப்பன்மை வினை கொண்டது கூத்தராற்றுப்படை. விரகு அறிபொரு - கடைக்கூட்டுதிர் - பொருநராற்றுப்படை முதுவாய் இரவல - கலவையொடு பெறுகுவிர்-சிறு பாணாற்றுப் படை புலைவாய்ப்பாண - இயக்கினர் கழிமின் - பெரும்பாணாற்றுப்படை அதிகாரப் புறனடை 456 | செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினு | | மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல் (66) | | | | (செய்யுள் மருங்கினும் வழக்கு இயல் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம் பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்) |
To know the nature of all the words found in literature and usage they must be illustrated individually in their many different aspects without Violating the rules of grammar. |