அதிகாரப் புறனடை சூ. 66 | 423 |
பி. இ. நூ. நேமி. சொ. 70 புல்லா எழுத்தின் கிளவிப் பொருள் படினும் இல்லா இலக்கணத்த தென்றொழிக-நல்லாய் மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா தொழிந்தனவும் சார்த்தி யுரை பிரயோ. 50 ஆக்கும் பிரதி பதத்துடனே அழியா நிருத்தி நோக்கும்படி யச்சனைய உதாரணம் நோக்கினர் ஈர் தூக்கும் பொழுது அரிதாவ தொன்றில்லை சொல்லாதனவும் காக்குந் திறங்கண்டு காப்பதுவேகடன் கற்றவர்க்கே. நன். 461 சொற்றொறும் இற்றிதன் பெற்றியென் றனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலின் சொற்றவற்றியலான் மற்றைய பிறவும் தெற்றென வுணர்தல் தெள்ளியோர் கடனே இ. வி. 372 ௸ ௸ ௸ இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இவ்வதிகாரத்து எடுத்தோத்தே இலேசேயன்றி இவ்வாற்றான் முடியாது நின்றவற்றுக்கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை : செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் முன்னரே முடிபு கூறப்படாது நின்ற சொற்கள் இவையென்று தெரிந்து அவற்றை உத்திவகை இலக்கணத்தோடு படுத்திக்காட்டுக, எ-று. 1வ-று : தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுநீர் ஆரல் பார்க்கும் குருகு முண்டுதாம் மணந்த ஞான்றே (குறுந். 25)
1. இதனை ‘ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி’ (454) என்னும் சூத்திரத்தில் கூறுவர் நச்சினார்க்கினியர். |