அதிகாரப் புறனடை சூ. 66 | 425 |
இது பிற நூல்முடிந்தது தான் உடம்படுதல் என்னும் தந்திர வுத்தி. பிறவுமன்ன செய்கை-விதி. ‘சொல் வரைந்தறியல்’ எனவே, வரைந்தோதாது பொதுவகையான் ஓதப்பட்டவற்றின் மேற்று இப்புறனடை யென்பதாம். இனி ஓர் உரை : செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற்கிளக்கப்படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொல் எல்லாவற்றையும் அவ்வத் தொன்னூல் நெறியாற்பிழையாமைச் சொல் வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்காட்டுக என்றவாறு. என்னாற் கிளக்கப்படாது என்பது பெற்றவாறு என்னையெனின், கிளந்தன பிறநூலிற் கொணர்ந்து காட்டல் வேண்டாமையிற் கிளக்கப்படாதன என்பது பெறப்படும் என்க. புறனடையாற் கொள்ளப்படுவன; ‘யானு நீயு மவனும் செல்வேம்’ எனவும், யானும் நீயும் செல்வேம் எனவும் ஏனையிடத்திற்குரிய சொல்றன்மைச் சொல்லோ டியைந்தவழித் தன்மையான் முடிதலும், அவனும் நீயும் சென்மின் எனப் படர்க்கைச்சொல் முன்னிலையோ டீயைந்தவழி முன்னிலையான் முடிதலும் ‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்’. என்புழிப் ‘பல்லே முள்ளும்’ எனத் தன்மையாகற் பாலது ‘பல்லோருள்ளும் எனப் படர்க்கைப் பன்மையாய வழி அமைதலும், முரசுகெழு தானை மூவருள்ளும்’ அரசெனப் படுவது நினதே பெரும (புறம். 35) என்புழி மூவிருள்ளும்’ என முன்னிலையாகற்பாலது ‘மூவருள்ளும்’ எனப் படர்க்கையாய வழி அமைதலும், ‘இரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழிக் ‘கூர்ங்கோட்டது’ என ஒருமையாகற்பாலது ‘கூர்ங்கோட்ட’ எனப் பன்மையாய வழி அமைதலுமாம். பிறவும் உளவேனும் கொள்க. அகத்திய முதலாயின எல்லா விலக்கணமும் கூறலிற் பல்வேறு ‘செய்தியினூல்’ என்றார். |