என்பன வலிக்கும் வழி வலித்தல். 3‘சுடுமண் பாவை’ ‘குன்றியலுகரத் திறுதி’ (கிளவி.8) என்பன மெலிக்கும் வழி மெலித்தல். 4‘தண்ணந் துறைவன்’ (குறுந். 296) என்பது விரிக்கும் வழி விரித்தல். 5‘மழவர் ஓட்டிய’ (அகம் 1) என்பது தொகுக்கும் வழித் தொகுத்தல் ‘குன்றி கோபம் கொடிவிடு பவளம் ஒண்செங் காந்தன் ஒக்கும் நின்னிறம்’ என்புழிச் 6செவ்வெண்ணின் தொகை தொக்கு நிற்றலின் இதுவுமது. ‘வீடுமின்’ என்பது நீட்டும்வழி நீட்டல். ‘பாசிலை’ (புறம் 54) என்பது காட்டுவாரும் உளர். ‘உண்டார்ந்து’ என்பது ‘உண்டருந்து’ எனக் குறுகி நிற்றலின் குறுக்கும் வழிக் குறுக்கல். ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்பதுமது. பிறவும் அன்ன. ‘நாட்டல் வலிய’ என்றது இவ்வறுவகை விகாரமும் இன்னுழியாம் என்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யும் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்றவாறு. நாட்டல் நிலைபெறச் செய்தல்.
3. மட்பாவை-மண்பாவை. குற்றியலுகரத்திறுதி-குன்றியலுகரத்திறுதி. 4. தண்துறைவன்-தண்ணந்துறைவன்-அம் விரித்தது 5. மழவரை என்பது மழவர் என்றாக்கப்பட்டது. இரண்டாம் வேற்றுமைத் தொகை என்னலாமாயினும் முதல் வேற்றுமைத் தொடராகவும் ஆம் ஆதலின் தொடுக்கும் வழித் தொகுத்தல் எனப்பட்டது. 6. குன்றியும் கோபமும் எனவரும் உம்மை தொக்கது. |