தெய் மேற் சொல்லப்பட்ட நால்வகைச் சொல்லும் செய்யுளகத்து விகாரப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : அந்நாற்சொல்லுமாவன இயற் சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என்றவாறு. தொடுக்குங்காலை என்பது ஒன்றோடொன்று தொடர்பு படச் செய்யுளாக்குங்காலத்து என்றவாறு. வலிக்கும் வழி வலித்தல் என்பது மெல்லழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும் வழி வல்லெழுத்தாகத் தொடுத்தல். மெலிக்கும் வழி மெலித்தல் என்பது வல்லெழுத்தினை மெல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும் வழி மெல்லெழுத்தாகத் தொடுத்தல். விரிக்கும் வழி விரித்தல் என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின் மேல் ஒன்றும் இரண்டும் எழுத்து விரிக்க வேண்டும்வழி விரித்துத் தொடுத்தல். தொகுக்கும் வழி்த்தொகுத்தல் என்பது பொருளுணர்ந்துஞ் சொல்லின்கண் ஒன்றும் இரண்டும் எழுத்துத் தொகுத்துத் தொடுக்க வேண்டும் வழித் தொகுத்துத் தொடுத்தல். நீட்டும் வழிநீட்டல் என்பது குற்றெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொல்லை நெட்டெழுத்தாகத் தொடுக்க வேண்டும்வழி நெட்டெழுத்தாகத் தொடுத்தல். குறுக்கும்வழிக் குறுக்கலாவது நெட்டெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொற்களைக் குற்றெழுத்தாகத் தொடுக்க வேண்டும் வழிக் குற்றெழுத்தாகத் தொடுத்தல். நாட்டல் வலிய என்மனார் புலவர் என்பது இவ்வாறாகச் செய்யுட்கண் வைத்தல் வலியுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர், என்றவாறு; குற்றம் இல என்றவாறு. விகாரப்படாமல் தொடுத்தல் சொல்லாமல் முடிந்ததாம். உ-ம் : | தத்தங் கிளவி தம்மகப் பட்ட | | முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை (தொல். எழுத 164) |
|