‘தண்ணந் துறைவன் தகவிலர்’ என்றவழித் ‘தண்’ என்பது ‘தண்ணம்’ என விரிந்து நின்றது. ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல்’ என்றவழி ‘வேண்டாதாரை’ என்பது ‘வேண்டார்’ எனத் தொக்குநின்றது. தொகுத்தல் என்பது சுருக்குதல். அஃதேல் அத் ‘தா’ என்பது இவ்விலக்கணத்தால் தொகுக. ‘ஐ’ என்பது ‘உருபு தொக வருதல்’ (எழுத் 157) என்புழி அடங்காதோ எனின், ஐகாரம் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் என ஓதப்படுதலின் அஃது உயர்திணைக்கண் தொகாது நி்ற்றல் வேண்டும். ஆயினும் செய்யுளின்பம் வேண்டித் தொகப் பெறும் என்பது இவ்விலக்கணத்தாற் கொள்ளப்படும். ‘பாசிழைபாகம் பசப்பித்தான்’ என்றவழி ‘பச்சிழை’ எனற்பாலது ‘பாசிழை’ என நீண்டு நின்றது. ‘திருத்தார் நன்றென்றேன் தியேன்’ இதனுள் ‘தீயேன்’ என்பது ‘தியேன்’ எனக் குறுகி நின்றது. அந்நாற் சொல்லும் இவ்வாறு விகாரப்படும் என்றமையான் ஒரு மொழிக்கண்ணே இவை வருவன வுணர்க. நச் இது செய்யுள் விகாரம் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : அந்நாற் சொல்லும் தொடுக்குங்காலை-முற்கூறிய நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்குங்கால், வலிக்கும் வழி வலித்தலும் - மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டும் வழி வல்லொற்றாக்கலும், மெலிக்கும் வழி மெலித்தலும் - வல்லொற்றை மெல்லொற்றாக்க வேண்டும்வழி மெல்லொற்றாக்கலும், விரிக்கும் வழி விரித்தலும் - சந்தி நிரம்புதற்கு ஓர் சொல்லை விரிக்க வேண்டும்வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும் - சந்தம் உளவாதற்கு ஓர் சொல்லைத் தொகுக்க வேண்டும் வழித் தொகுத்தலும், நீட்டும் வழி நீட்டலும்-குற்றெழுத்தினை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழிக் |