குறுக்கலும்-நெட்டெழுத்தினைக் குறுக்க வேண்டும் வழிக் குறுக்கலும் ஆகிய அறுவகை விகாரமும், நாட்டல் வலிய என்மனார் புலவர்-செய்யுள் இன்பம் பெறச் செய்வார் நாட்டுதலை வலியாகவுடைய என்று கூறுவர் புலவர், எ-று. உ-ம் : | ‘முத்தை வரூஉங் காலந் தோன்றின்’ (தொல். தொகை. 22) | | ‘குன்றிய லுகரத் திறுதியாகும்’ (தொல். கிளவி. 8) ‘தண்ணந் துறைவன் கொடுமை’ (குறுந்.8) 1‘இடையெனப் படுப’ (தொல். இடை. 1) ‘வெள்வளை நல்காள் 2வீடுமென் உயிரே’ ‘திருத்தார் நன்றென்றேன்3 தியேன்’ |
என முறையே காண்க. 4‘பாசிலை’ (புறம். 54), ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்றாற்போல இரண்டு விகாரம் வருவனவற்றை ‘நாட்டல் வலிய, என்றதனாற் கொள்க. வெள் இது செய்யுள் விகாரம் ஆமாறு கூறுகின்றது. இ-ள், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் அந்நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்குங்கால் மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டுமிடத்து வல்லொற்றாக்கலும், வல்லொற்றை மெல்லாற்றாக்க வேண்டுமிடத்து மெல்லொற்றாக்கலும், குறைவதனை விரிக்க வேண்டுமிடத்து விரித்தலும், மிகுவதனைத் தொகுக்க வேண்டுமிடத்துத் தொகுத்தலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்க வேண்டுமிடத்துக் நீட்டலும் நெட்டெழுத்தைக் குறுக்க வேண்டுமிடத்துக் குறுக்கலும் ஆகிய அறுவகை விகாரமும் செய்யுளின்பம் பெறச் செய்யும் சான்றோர் அணிபெற நாட்டுதலை வலியாக வுடைய, எ-று. நாட்டல்-நிலை பெறச் செய்தல்.
1. ‘என்று சொல்லப்படுப’ என்பது ‘எனப்படுப’ எனத் தொகுக்கப்பட்டது இதில் ‘சொல்’ என்பது தொகுத்தது. 2. விடும் என்பகு வீடும் என்று நீட்டப்பட்டது. 3. ‘தீயேன்’ என்பது ‘தியேன்’ எனக் குறுக்கப்பட்டது. 4. பசுமை என்பது மை தொகுத்துப்பகரம் நீட்டிக் கூறப்பட்டது. ஆழ்ந்து என்பது ஆகாரம் அகரமாகக் குறுக்கிழகர மெய்யில் உகரம் விரித்துக் கூறப்பட்டது. |